அழுத்தத்தை வெளியேற்றுதல் Jeffersonville, Indiana, USA 62-0513E 1நன்றி, சகோ. ரட்டல். சுவிசேஷத்தில் எனக்கு ஒரு குமாரன் இருக்கிறான் என்று அறிந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆம். நல்லது, அருமையானது; அது நல்லது. ஆம்; நான், சகோ. ரட்டலை நிச்சயம் பாராட்டுகிறேன். ஒரு காலத்தில் பவுலுக்கு தீமோத்தேயு என்னும் குமாரன் இருந்தான் என்று நினைக்கிறேன். அவன் அவனை சுவிசேஷத்தில் தன் குமாரன் என்றழைத்தான். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, அது முன்பிருந்த பிளாஸி ஃபோர்டா? அடேயப்பா, பிளாஸி நான்... நீண்ட காலமாகிவிட்டது. ஆம், அப்படித்தான். நான் சிறுவனாயிருந்த காலம் என் நினைவுக்கு வருகிறது; அவளுடைய சகோதரன் லாயிட்டும், நானும் ஒன்றாக விளையாடினோம். அவள் பெரிய 'கேக்'குகளை உண்டாக்குவது வழக்கம். உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் அங்கு சென்று எங்களுக்குத் திகட்டிப் போகும் வரைக்கும் அதை தின்போம். 2ஒருமுறை அவர்கள் என்னை அழைத்தது என் நினைவுக்கு வருகிறது - லாயிட் என்னை அழைத்தான். நாங்கள்... பிளாஸி ஒரு கேக்கை செய்து வைத்திருந்தாள்... அவள் அப்பொழுது ஒரு சிறுமி. அவள் ஒரு கேக்கை செய்துவைத்திருந்தாள். எங்களால் தின்ன முடியாது என்னும் நிலை அடையும் வரை நாங்கள் தின்று கொண்டேயிருந்தோம். “நான் இரவு முழுவதும் லாயிட்டுடன் தங்கிவிடுவேன். இருட்டாகிவிட்டது என்று எண்ணினேன். ஆனால், சிறிது நேரத்துக்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று தோன்றினது. இருட்டில் செல்ல எனக்கு பயமாயிருந்தது. எனவே, வீட்டை அடைய சாலையில் ஓரே ஓட்டம் பிடித்தேன். அவளுடைய தந்தையைக் குறித்து எனக்கு ஞாபகமுண்டு. உன் தாயார் இன்னும் உயிரோடிருக்கிறார்களா? உயிரோடிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நல்லது. அது நல்லது. அந்த நாட்களுக்குப் பிறகு எத்தனையோ காரியங்கள் சம்பவித்துவிட்டன. ஆம், இப்பொழுது நாங்கள் இங்கே நடுத்தர வயதுள்ளவர்களாய், பாட்டனார், பாட்டி என்னும் நிலையையடைந்து... நல்லது. ஒரு தேசம் உண்டு, அங்கு நமக்கு வயதே ஆகாது. பிளாஸி, அந்த தேசத்தை நீ தேடிக்கொண்டு, அதை கண்டுபிடிப்பாய் என்னும் நிச்சயம் உனக்கு உள்ளதற்காக எனக்கு மிக்க மகிழ்ச்சி . ஜிம், ஜிம் எப்படி இருக்கிறார், அவர்? ஆம், அது எனக்கு ஞாபகமுள்ளது. ஜிம், அவளுடைய கணவர். அவரை எனக்கு நன்றாக ஞாபகமுள்ளது. அவர்களுடைய பிள்ளைகளில் சிலரை எனக்குத் தெரியும். அதற்குள்ளாக - அவர்களுக்கு விவாகமாகி பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்த வேளையில் - நான் சுவிசேஷ ஊழியத்துக்கு சென்றுவிட்டேன். நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துவிட்டோம். நான் எப்பொழுதாவது, சகோ. லாயிட்டைக் காண்பதுண்டு. சாலையில் காரோட்டிச் செல்லும் போது அவரைக் காணும்போது அவரைக் கூப்பிடுவதுண்டு. அவர்கள் எத்தனையோ முறை எனக்கு ஆகாரம் சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நான், கூடப் பிறந்த சகோதரனும், சகோதரியும் போல. 3சகோ. ரட்டலின் முதல் உந்துதல் இந்த இடத்தில் என்பதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாயுள்ளது. அவர் சாலை பக்கம் உள்ள ஒரு வீட்டை கர்த்தருடைய வீடாக மாற்றியிருக்கிறார். அது மிகவும் நல்லது. மேலும், உங்களுக்குத் தெரியுமா, சிலநேரங்களில் ஒன்றை நீங்கள் முன்கூட்டியே காண முடியுமானால்... அது அதை மேலான ஒன்றாகச் செய்கிறது. எனவே, இந்த இளைஞனில் ஏதோ ஒன்றுள்ளதை நம்மால் காண முடிந்தது. அவர் மிகவும் நாணமுள்ளவராயிருந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தையும், நானும் ஒன்றாக வேலை செய்தோம். அவருடைய தந்தை வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்து எதையும் சாதித்து முடிப்பவர் என்றறிவேன். அந்த தன்மை ஏன் மகனுக்கு வந்திருக்கக்கூடாது? அவருக்கு ஒரு அருமை தாயார் இருந்தது எனக்குத் தெரியும். அவர் நல்ல பரம்பரையில் வந்தவர். எனவே, அவரில் நன்மையான சில குணங்கள் காணப்பட வேண்டும். பாருங்கள்? அவருடைய இருதயத்தில் கர்த்தருக்கு சேவை செய்ய வேண்டுமெனும் அந்த ஆவல்... ஆழத்தை ஆழம் நோக்கிக் கூப்பிடும் போது, அந்த கூப்பிடுதலுக்கு பதிலளிக்க ஒரு ஆழம் இருக்க வேண்டும். சகோ. ரட்டல் இவ்வாறு சென்று கொண்டிருப்பதைக் காண்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 4இங்குள்ள இந்த அருமையான ஜனங்கள்... இன்றிரவு இங்கு வந்து, இங்கு சஞ்சாரிகளாயிருக்கும் இந்த பரிசுத்தவான்களின் கூட்டத்துக்கு பிரசங்கிப்பது எனக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய சிலாக்கியமே. நமக்கு இல்லை... இது நமது வாசஸ்தலம் அல்ல, அது உங்களுக்குத் தெரியும். நாம் சஞ்சாரிகள். நாம் - நாம் எனக்கு ஞாபகம் வருகிறது, சகோதரி ரட்டல், நீங்கள் எப்படி அவருடன் கூட வந்து உட்காருவது வழக்கம் என்று. அவர் ஜெபம் செய்ய தலைவணங்குவார். உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அவர்களுக்கு நிச்சயம் இருந்தது. அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார் என்று சகோதரிக்கு நம்பிக்கை இருந்தது. எனவே அத்தகைய ஒரு நல்ல மனைவியும், நல்ல தகப்பனும், தாயும், அவர்களெல்லாரும் அவருக்காக ஜெபிக்கும் போது, சகோ. ரட்டலுக்கு ஏதாவதொன்று சம்பவிக்க வேண்டும். இதோ அதன் விளைவு. சகோ. ரட்டல், இது உங்களுக்கு நிற்கும் இடமாக மாத்திரம் இருந்து. இங்கிருந்து நீங்கள் சுவிசேஷத்தின் மகிமைக்கென்று உயர உயரசென்று மிகவும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஜெபம். 5சகோதரன், சகோதரி ரட்டல் அவர்களே, அங்குள்ள மாக்ஸ் இதைக் குறித்து இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருப்பான் என்று எனக்குத் தெரியும். பில்லி பால் பிரசங்கபீடத்தில் நிற்கக் காண்பது எனக்கு எவ்வளவு பிரியம்! என்றாவது ஒரு நாள் ஜோசப் பிரசங்கபீடத்தில் நிற்பதைக் காண நான் உயிரோடிருப்பேன் என்று நம்புகிறேன். அது மிகவும் நன்றாயிருக்கும். அப்பொழுது பிள்ளைகளை வாலிபப்பருவம் வரைக்கும் வளர்க்க நாம் பட்டபாடுகள் தொல்லைகள் அனைத்தும்; அது நமக்கு நல்லுணர்ச்சியைத் தரும். நீங்கள் பின்நோக்கி உங்கள் அப்பாவின் தலையிலுள்ள நரைமயிரைக் காணும்போது. உங்கள் தவறான செயல்கள் அவருக்கு நரை மயிர் தோன்றக் காரணமாயிருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது உண்மை. 6நல்லது, இங்கு வந்திருப்பது நல்லது, என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது. நான் பிரசங்கித்துக் கொண்டே வருகிறேன்... நானும், சகோ. ஜீன் கோடும் நேற்று மீன் பிடிக்க சிறு பயணம் மேற்கொண்டோம். எங்களுக்கு மீன் கிடைத்தது. எனவே, எங்களுக்கு நல்ல தருணம் உண்டாயிருந்தது. நாங்கள் நேரம் கழித்து திரும்பி வந்தோம். நாங்கள் படகில் தண்ணீரின் மேல் சென்றோம். அங்கு சிறிது குளிராயிருந்தது. எனவே என்னைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் கோடைக் கால கூட்டங்களுக்கு செல்லவிருக்கிறோம். ஏறக்குறைய தொண்ணூறு நாள் கூட்டங்கள். ஆகஸ்டு முடிவில், அல்லது செம்ப்டம்பர் முதல் தேதி திரும்பி வருவோமென்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் இப்பொழுது செல்லும் இடம்... அந்த வாரம் நான் மிச்சிகனிலுள்ள, க்ரீன் பேவில் தொடங்குகிறேன். ஞாயிறு பிற்பகலில் சிக்காகோவிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நடக்கும் கன்வென்ஷனில் கலந்துகொள்ள அங்கு செல்வேன். க்ரீன் பேவில் கிறிஸ்தவ வர்த்தகரின் முல கன்வென்ஷனில் நான் பேசுவேன். அங்கிருந்து சிக்காகோவுக்கு செல்வேன். திங்கள் அன்று சகோ. ஜோசப் போல் நடத்தும் கூட்டத்தில் பங்குகொள்ள நான் சிக்காகோவில் இருப்பேன். அதன் பின்பு வீடு திரும்பி தென்பாகத்துக்குச் செல்வேன். தென் பைன்ஸ், வட கரோலினா, அங்கிருந்து தென் கரோலினா, பிறகு லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள தென் கேட் என்னுமிடத்திலுள்ள கெள் பாலஸ்க்கு செல்வேன். அங்கு நாற்பது சொச்சம் ஒருத்துவ சபைகள் ஒன்று சேர்ந்து அந்த கூட்டத்தை ஒழுங்கு செய்கின்றனர். ஒருத்துவக்காரர் எனக்காக கூட்டத்தை ஒழுங்கு செய்வது இதுவே முதன் முறையாகும். அங்கிருந்து ஆரிகான் வழியாக கலிபோர்னியா, பிறகு கனடாவுக்கு. அங்கிருந்து அலாஸ்காவிலுள்ள ஆங்கரேஜ். பின்பு இந்த இலையுதிர் காலத்தின் போது திரும்ப வருவேன். இந்த இலையுதிர் காலத்தின் பிற்பாகத்தின் போது கென்யா. டாங்கனீகா, டர்பன், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் கூட்டங்களை ஒழுங்கு செய்ய, சகோ. ஜோசப் போஸ் அங்கு செல்கிறார். இந்த இடங்களுக்கு செல்ல எனக்கு ஏவுதல் உண்டா என்று கேட்டால், எனக்கு இல்லை. ஆனால், எங்காவது ஓரிடத்தில் விதையை விதைக்க வேண்டுமென்றும். தேவனுடைய ராஜ்யத்துக்கென்று என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமெனும் எண்ணம் எனக்கு உண்டாகிறது. 7இப்பொழுது நாம் மற்றொரு ஜெபத்தை ஏறெடுக்க மறுபடியும் தலை வணங்குவோம். நாம் ஜெபம் செய்யவில்லை என்பதனால் அல்ல, ஆனால் உங்களிடம் சில வார்த்தைகளைப் பேசுவதற்கு எனக்குதவி செய்ய கர்த்தரிடம் கேட்க விரும்புகிறேன். எங்கள் பரலோகப் பிதாவே, இப்பொழுது நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உம்முடைய கிருபாசனத்தை அணுகுகிறோம். அவர் எங்களுக்கு அனுமதியளித்து அவரிடம் வர எங்களை அழைத்திருக்கிறார். நாங்கள் அணுகினால், நாங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது எங்களுக்கு அருளுப்படுமென்று அவர் உரைத்துள்ளார். நாங்கள் உமது நியாயாசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டுமென்று கேட்கப்போவதில்லை. எங்கள் குற்றங்களை நாங்கள் அறிக்கையிட்டு, நல்லதொன்றும் எங்களிடமில்லை என்பதை அறிவித்து, உம்மிடம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள கிருபாசனத்தண்டையில் நிற்கவே நாங்கள் விரும்புகிறோம். கர்த்தாவே, எங்களை சமர்ப்பிக்கிறோம். உமக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றுமில்லை, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் ஜெபமும், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.'' (யோவான்; 5:24) என்று அவர் கூறி எங்களை அழைத்துள்ளதன் நிமித்தமே. அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் வந்து அவருடைய நாமத்தில் எதைக் கேட்டாலும் அது அருளப்படும் என்று அவர் எங்களிடம் கூறியுள்ளார். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். 8எங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் நாங்கள் வந்து, இந்த சபையையும் எங்கள் அருமை சகோதரன், சகோ. ரட்டலையும் அவருடைய குடும்பத்தையும், இங்கு வந்துள்ள குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். நான் பார்க்கும் போது, இன்றிரவு திருமதி. மாரிஸை கண்டு, கடந்து சென்ற நாட்களை நினைவுகூரும் போது... தேவனே, நான் அவளிடம் கூறினது போன்று. எத்தனையோ காரியங்கள் சம்பவித்துவிட்டன. எத்தனையோ ஆபத்துகள், பாடுகள், கண்ணிகள். கர்த்தாவே, அவைகளின் வழியாக நீர் எங்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டீர். எங்கள் நம்பிக்கை உம்பேரில் உள்ளது. நாங்கள் உமக்குள் பாதையின் முடிவுக்கு சென்று கொண்டிருக்கிறோம். இந்த இடத்தை ஆசீர்வதியும். கர்த்தாவே, உம்முடைய நாமத்தை இந்த இடத்தில் வைத்து. இந்த இடத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்தவைகளை இவர்களுக்குத் தருவீராக. இன்றிரவு அந்த சகோதரன் ஜெபித்தது போன்று, பொல்லாங்கு... எல்லா தடைகளையும் நீர் நீக்கிப்போட வேண்டுமென்று இந்த இளைஞன் ஜெபித்தார். கர்த்தாவே, அதை அருளும். அவருடைய ஜெபத்துக்கு மறுஉத்தரவு அருளுவீராக. எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகமாக்கும். நீதியின் மேல் பசிதாகமுள்ள ஆத்துமாவுக்கு இரட்சிப்பை அருளுவீராக. இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய அப்பிரயோஜனமான ஊழியக்காரனின் குரலையும், முயற்சிகளையும் பரிசுத்தப்படுத்துவீராக. உம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பீராக. அது வெறுமையாய் திரும்பாமல் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக. இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய காரியங்களை எடுத்துக் கொண்டு, பெரியோர் முதல் சிறியோர் வரையிலுள்ள எங்களின் இருதயங்களை உற்சாகப்படுத்துவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 9இன்று காலை நான் நீண்ட நேரம் பிரசங்கித்துவிட்டேன். எனக்கு பிரசங்கம் என்றால் தெரியாது. நான் ஒரு வகையில் ஞாயிறு பள்ளிபாடத்தை போதித்தேன். ஒரு நாள் நான் ஆறு மணி நேரம் கற்றுக் கொடுத்தேன். இன்றிரவு அவ்வளவு மோசமாக இருக்காது என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இங்கு நான் ஒரு சிறு பொருளை வைத்திருக்கிறேன். ஏதாவதொரு வேதபாகத்தை படிக்க விரும்புகிறேன். ஏனெனில், அவருடைய வார்த்தைகள் தவறாது என்று நான் அறிந்திருக்கிறேன், என் சொற்கள் தவறக்கூடும். என் சொற்களை அவருடைய வார்த்தையுடன் சேர்த்து அவருடைய வார்த்தையை, அவருடைய வார்த்தையை சுற்றி ஒரு சந்தர்ப்பம் உண்டாக்கி, பொருளை உபயோகிக்க விரும்புகிறேன். 10இன்றிரவு வேதத்திலிருந்து இரு பாகங்களைப் படிக்க விரும்புகிறேன். நீதிமொழிகள்; 18ம் அதிகாரம், 10ம் வசனத்தை ஒரு பாகமாகவும், ஏசாயா; 32:2ஐ மற்றொரு பாகமாகவும் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீதிமொழிகள்;18:10. கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். ஏசாயா புத்தகத்தில், 32ம் அதிகாரம். முதலாம், இரண்டாம் வசனங்கள்: இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும், நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள். அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். 11இப்பொழுது என் பொருள்: அழுத்தத்தை வெளியேற்றுதல் என்பதைப் பொருளாக உபயோகிக்க விரும்புகிறேன். இது ஒரு வினோதமான பொருள், அழுத்தத்தை வெளியேற்றுதல் என்பது. இதை நான் தெரிந்து கொண்ட காரணம் என்னவெனில்; கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு நான் எப்பொழுதுமே ஜெபித்து கர்த்தரை தேடுவதுண்டு. அது பெரிய சபையானாலும் சிறிய சபையானாலும், ஒருவரைக் கொண்டதானாலும், லட்சக்கணக்கானவரைக் கொண்டதானாலும், நான் காணப்படுவதற்கோ அல்லது கேட்கப்படுவதற்கோ அங்கு நிற்பதில்லை. என் கர்த்தரை மகிமைப்படுத்த ஏதாவதொன்றைச் செய்யவே நான் நிற்கிறேன். எனவே, ஜனங்களின் தேவைகளைக் காணும் போது... நான் கேட்கப்படுவதற்காக இங்கு வருவதில்லை. ஏனெனில் நான் கேட்கப்படுவதற்கு என்னில் ஒன்றுமில்லை மோசமான குரல், கல்விகற்காதவன், எடுத்துக் கொண்ட பொருளில் நிலைநிற்காமல் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தாவிச் செல்பவன். நான் சொல்வன்மை படைத்த பேச்சாளன் அல்ல, ஆனால், கர்த்தரை நான் நேசிக்கிறேன். முதலில் அவருடைய ஜனங்களை நேசிக்காமல் நான் கிறிஸ்துவை நேசிக்க முடியாது. பாருங்கள்? அவருடைய ஜனங்களை நான் நேசிக்க வேண்டும். அவருடைய ஜனங்களை நான் நேசித்தால், அவரை நான் நேசிக்கிறேன். 12மேலும், அவர் செய்த விதமாகவே நானும் செய்ய விரும்புகிறேன். அவருக்கிருந்த குறிக்கோள்களை என்னுடைய குறிக்கோளாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதாவது எப்பொழுதும் நன்மை செய்து யாருக்காகிலும் உதவி செய்வதையே. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தைக் கண்டு. இந்த சபை ஒரு மேன்மையான போதகரைப்பெற்றுள்ளது என்பதை அறிந்தவர்களாய்... அதை நான் புகழ்ச்சிக்காக கூறவில்லை, என் இருதயப் பூர்வமாகக் கூறுகிறேன். வேறெதாவதை கூறினால் நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். என்ன வந்தாலும் போனாலும், சத்தியத்தில் நிலைநிற்கும் ஒரு போதகரை இச்சபை பெற்றுள்ளது என்று நான் நம்புகிறேன். அதை நான் நம்புகிறேன். அதுவே என் குமாரனில் நான் கொண்டுள்ள திடமான நம்பிக்கை. அதை நான் நம்புகிறேன். நான் அவர் பயமில்லாதவர். நீங்கள்... அவர் கெளரவமானவர், பரிசுத்த மனிதன், இந்த கடைசிநாளின் ஊழியத்திற்கென தேவனால் அனுப்பப்பட்டவர் என்று நான் நம்புகிறேன். நான் பிரசங்கிக்கும் அதே வார்த்தையின் பாகத்தை அவரும் பிரசங்கிக்கிறார். அதாவது, ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும், அது எழுதப்பட்ட விதமாகவே. அது எனக்குப் பிடிக்கும், எதனுடனும் ஒப்புரவாகாமல் வார்த்தையில் நிலைத்திருப்பதென்பது. அது எனக்குப் பிடிக்கும். 13அவர் வாலிபனாயிருந்தும் அப்படிப்பட்ட மனிதனாக அவர் இருக்கும் பட்சத்தில், அவருடைய பிரசங்கபீடத்தில் நின்று கொண்டு அவருடைய சபையோருக்கு உதவும்படியாக நான் என்ன பேச வேண்டுமென்று எண்ணினேன். ஏனெனில், அதற்காகவே அவர் என்னை அழைத்திருக்கிறார் அவர் ஒரு மேய்ப்பன், அவருடைய ஆடுகளை அவர் கண்காணித்து வரும்கிறார். இப்படி ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்கினால், அவருடைய ஜனங்களுக்கு அது உதவியாயிருக்கும் என்று அவர் நினைத்திருப்பார். அவர் உங்களில் சிரத்தை கொண்டுள்ளார்; அவர் உங்கள் நலனில் சிரத்தை கொண்டுள்ளார். இரவும் பகலும், எந்த நேரமானாலும், எந்த ஒரு இடத்துக்கும் அவர் சென்று அவரால் முடிந்த உதவியைச் செய்வார். நல்லது. அப்படிப்பட்டவரே தேவனுடைய உண்மையான ஊழியக்காரன். 14அவர் சொன்னார் அவர் என்னைக் கஷ்டப்படுத்தினதாகவும், தொல்லைப்படுத்தினதாகவும், சதா தொந்தரவுபடுத்தினதாகவும் கூறினார். அவர் அப்படி செய்யவில்லை. அவர் என்னை வரும்படியாக சதா கேட்டுக் கொண்டேயிருந்தது, அவர் மேல் எனக்கிருந்த அன்பை அதிகரிக்கச் செய்தது. அது எனக்குப் பிரியம். அவருக்கு என் மேலுள்ள நம்பிக்கையை அது காண்பிக்கிறது. அவருடைய ஆடுகளுக்கு நான் தீங்கு விளைவிப்பேன் என்று அவர் எண்ணியிருந்தால், அவர்களுக்கு முன்பாக அவர் என்னை கொண்டு, வந்து நிறுத்தியிருக்கமாட்டார். இல்லவே இல்லை, எந்த மேய்ப்பனும் அவ்வாறு செய்யமாட்டார். நான் நன்மையானதையே செய்வேன் என்பதே அவருடைய கருத்து. அது, அவர் நான் வரும்படியாக அவர் என்னை அழைத்த தன் முலம் அவர் எனக்கு பெரிய ஒரு சிலாக்கியத்தை அளித்திருக்கிறார். அவருடைய குறிக்கோள்கள் எனக்குப் பிடிக்கும் அதாவது அது நிகழும் வரைக்கும் அதில் நிலைத்திருப்பது. அப்படிப்பட்டவர் தான் விசுவாசம் கொண்ட மனிதர். அது எனக்குப் பிடிக்கும். எனவே நான், ''இந்த சபையோரிடம் என்ன பேசுவேன்? அவர்களுக்கு எல்லாவற்றிலும் சரியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை“ என்று எண்ணினேன். ஆனால், இன்று ஜனங்களின் மேல் ஒரு அழுத்தம் தங்கியுள்ளது. அந்த அழுத்தம் ஸ்தாபன பாகுபாடு அற்றது. அதற்கு வயது வரம்பு எதுவுமில்லை. அது பட்சபாதமில்லாதது. அது இளைஞர், வயோதிபர், நல்லோர், தீயோர் எல்லார் மேலும் தங்கியுள்ளது. 15நாம் பயம் நிறைந்த காலத்தில், நரம்பு இறுக்கம் நிறைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லோருமே இங்கும் அங்கும் விரைந்து சென்று, முடிவில் எங்குமே அடைவதில்லை. அது இக்காலத்தின் போக்காயுள்ளது. இந்த சபையும் கூட எங்குமுள்ள மற்றவர்களைப் போல் அதனால் தொல்லைப்படுகிறதென்று நானறிவேன். கூடாரங்கள் அதனால் தொல்லைப்படுகின்றன எல்லாவிடங்களிலும், முழு உலகமே. இது அழுத்தத்தின் காலம். அவசரம், அவசரம்; அவசரம், அவசரம்; அவசரப்பட்டு, முடிவில் காத்திருத்தல். இரவு உணவு உண்பதற்காக மணிக்கு தொண்ணூறு மைல் வேகம் காரோட்டிச் சென்று, உணவு சமைத்து முடிவதற்கு இரண்டுமணி நேரம் காத்திருத்தல். அது உண்மை! அது இக்காலத்தின் போக்கும். இவ்வாறு அவசரமாககாரில் வேகமாகச் செல்வது உங்களுக்கு நரம்பு இறுக்கத்தை உண்டாக்குகிறது. அப்பொழுது மனைவி சிறிது மாறாக எதையாவது கூறிவிட்டால், அவள் மேல் சீறி விழுகிறீர்கள், கோபம். கணவன் ஏதாவதொன்றை கூறிவிட்டால், நீங்கள் காலைத் தரையில் ஓங்கி மிதித்து, அறைக்குச் செல்லும்படி அவரை விரட்டுகிறீர்கள். பாருங்கள்? “கணவரே, உம்முடன் பேச நான் தயாரில்லை. இங்கிருந்து போய்விடும்” என்கிறீர்கள். மனைவியே, ஓ, எனக்கு பயமாயுள்ளது. பாருங்கள்? ஏன்? என்ன விஷயம்? பாருங்கள்? 16இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த இறுக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் விளைவு தவறைச் செய்து, இடத்துக்கு பொருத்தமில்லாதபடி நடந்து கொள்வதே. அது உண்மை! அது ஏழைகள் அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது; நடுத்தர வகுப்பினர் அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது; பணக்காரர் அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது; மிகவும் நல்லோர் அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது; நல்லோர் அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது. ஏனெனில் அது இறுக்கம், நீராவி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை எங்காவது வெளியேற்ற வேண்டும். பாருங்கள்? நீங்கள் அவ்வாறு செய்யாவிடில், 'பாய்லர்' வெடித்துவிடும். நாம் காண்பது என்னவெனில், நாட்கள் செல்லச்செல்ல, அது அதிகரிக்கிறது. நீங்கள் வேலை செய்யுமிடத்தில் உங்கள் முதலாளியிடம், “நல்லது, இன்னார் இன்னார்'' என்று கோபமாகப் பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளையிடம், ”இங்கே வா“ என்று அதட்டுகிறீர்கள். ”அம்மா, என்னால்... பாருங்கள், பார்த்தீர்களா? அது உங்கள் எரிச்சலை அதிகரிக்கச் செய்கிறது. ஊ, என்னே! பாருங்கள்? உங்கள் தலை வெடித்துவிடும் போன்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படுகிறது. எனக்குத் தெரியும், அதனுடன் ஒவ்வொரு நாளும் நான் ஈடுபடுகிறேன். எனவே, அது என்னவென்று எனக்குத் தெரியும். அது அதிகரிக்கிறது. 17நான்... அன்றொரு இரவு இதைக் குறித்து சிந்தித்தேன். நான் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நமது போதகர் வியாதியாயிருந்ததாக நினைத்தேன்; ஆனால், அவர்களைத்துப் போயிருந்தார். அவர் ஓடி, ஓடி, ஓடி, ஓடி, முடிவில் களைப்புற்றார். அவர்களில் சிலர் என்னைச் சந்தித்து அவர்கள் அங்குள்ள அலுவலகத்தில் என்னைச் சந்தித்து, அவருக்கு வந்த அழைப்புகளுக்கு நான் சொல்லக்கூடுமா என்று என்னைக் கேட்டனர். நான் நாள் முழுவதும் வேலையில் ஈடுபட்டிருந்தேன், வெவ்வேறு இடங்களிலிருந்து ஊழியக்காரர் வந்திருந்தனர். நான், சரியென்றேன். அவருக்கு வந்த அழைப்புகளுக்கு நான் சென்றேன். நான் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்கள் ஒரு ஸ்திரீயின் பெயரையும் அவள் தங்கியிருந்த அறையின் எண்ணையும் எனக்குக் கொடுத்திருந்தனர். நான் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு ஸ்திரீயிடம் சென்றேன்... பார்வையாளர்களின் நேரம் முடிவதற்கு பதினைந்து இருபது நிமிடங்கள் மாத்திரமே இருந்தது. நான் அவளிடம் சென்று நான் ஒரு போதகர் என்றும், இன்னின்ன பெயர் கொண்ட ஸ்திரீயைக் காண விரும்புகிறேன் என்றும் கூறினேன். அவள் என்னை முறைத்துப் பார்த்தாள். அவள் எதையோ செய்து கொண்டிருந்தாள். அவள் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாள். நான், ''வார்ட்டில் இந்த பெயர் கொண்ட ஸ்திரீ எங்கிருக்கிறாள் என்று அறிய விரும்புகிறேன் என்றேன்.'' அவள், எனக்குத் தெரியாது என்றாள். நான், எனக்கு ஒரு குறிப்பிட்ட இடமும், அதன் எண்ணும் கொடுக்கப்பட்டது. உங்களை முதலில் கேட்கலாம் என்று நினைத்தேன் என்றேன். அவள், “உங்களிடம் அந்த எண் இருந்தால், போய் பாருங்கள்” என்று சொல்லிவிட்டாள். நான், “நன்றி” என்று கூறிவிட்டு, அந்த 'வாட்'டின் வாசலையடைந்து, இன்னின்ன பெயர் கொண்ட ஸ்திரீ இங்கிருக்கிறாளா? என்று கேட்டேன்; “இல்லை,” என்று உள்ளேயிருந்து பதில் வந்தது. நான் திரும்பிச் சென்று என் டிக்கெட்டைப் பார்த்தேன். நான் முதலில் கண்ட அந்த ஸ்திரீயிடம் சென்று, “அது தவறான எண்” என்றேன். அவள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்? என்று கேட்டாள். நான் பெயரைச் சொன்னேன். அவள், “இந்த தளத்தில் அவள் இல்லை” என்றாள். ''நன்றி.'' நான், ''மேல் மாடிக்குச் சென்று பார்க்கிறேன்'' என்றேன். 18எனவே நான் மேல் மாடியில் அடுத்த அறைக்குச் சென்றேன்... தலையைச் சொறிந்து கொண்டு மேசையினருகில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு மருத்துவரிடம் நான் முதலில் சென்று, “எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவரை விட்டுச் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டே நான் அந்த வரிசையில் சிறிது தூரம் சென்றேன். அங்கு மேசையினருகில் ஒரு நர்ஸ் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நான், ”என்னை மன்னியுங்கள் என்றேன்.'' அவள், “உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டாள். நான், “இன்னின்ன பெயர் கொண்ட ஸ்திரீ இங்கு எங்காவது இருக்கிறாளா?” என்று கேட்டேன். அவள், “எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டாள். நான் - நான் சொன்னேன்... அவள் சொன்னாள்... நான், “321 - இல்லை 221 எண் அறைக்கு போக வேண்டியவன். அங்கு சென்ற போது யாருமேயில்லை. அந்த ஸ்திரீ, ''அந்த பெயர் கொண்ட ஸ்திரீ கீழே இல்லை'' என்று கூறினாள். எனவே, ஒருக்கால் மேல் மாடியில் இருக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன்“ என்றேன். அவள், ”அப்படியானால், நீங்கள் ஏன் 321 எண் அறைக்குச் சென்று பார்க்கக்கூடாது?“ என்றாள். நான், “நன்றி” என்று கூறிவிட்டு 321 எண் அறையை அடைந்து, “இன்னின்ன பெயருள்ள ஸ்திரீ இங்கிருக்கிறாளா?” என்று கேட்டேன். “இல்லை!” அங்கு ஒரு ஸ்திரீ படுத்துக் கொண்டிருந்தாள். அவள், அந்த ஸ்திரீ இந்த அறைக்கு எதிரிலுள்ள 31ம் எண் அறையில் இருந்தாள்“ என்றாள். நான், “நன்றி. அம்மணி” என்று சொல்லிவிட்டு, அந்த அறைக்கு நடந்து சென்று, “இன்னின்ன ஸ்திரீ இங்கு இருக்கிறாளா?” என்று கேட்டேன். “இல்லை, அவளைக் கீழே கொண்டு சென்றுவிட்டார்கள்.” 19நான், “இது என்ன என்று நினைத்து படிக்கட்டுகள் இறங்கி மறுபடியும் கீழே சென்றேன். நான்! நான்... அவள் - அவர்கள் அறை எண்ணைக் கொடுத்தனர். நான் கீழே சென்று எல்லாவிடங்களிலும்... நான் மறுபடியும் அந்த மேசையினருகே செல்ல பயந்தேன். அந்த எண்ணுள்ள அறையை கண்டுபிடிக்க, மேலும் கீழும் சென்று பார்த்தேன். ஆனால், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு கொம்பு முளைத்துள்ளதாக எண்ணம். இதோ அந்த மருத்துவர் கையில் பரிசோதனை குழாயுடனும், கைப்பையுடனும் வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர் நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமுள்ளவராயிருந்தார். அவரை எதற்கு ஒப்பிடலாமென்றால்... அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். நான், “மாலை வணக்கம், ஐயா. இந்த எண் கொண்ட அறை எங்குள்ளது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். அவர், ''மேலே இந்த வழியாக வெளியே அந்த வழயாக'' என்றார். நான், “உங்கள் தகவலுக்கு நன்றி” என்றேன். நான் கூறுவது உண்மை. அவர், மேலே இந்த வழியாக, வெளியே அந்த வழியாக என்றார். நான், “நன்றி” என்று கூறிவிட்டு, நான் இன்னும் அந்த இடத்தை அடையவில்லையே என்று நினைத்தேன். 20நான் திரும்பிப் பார்த்த போது, அந்த மேசையினருகில் தயையுள்ள வேறொரு ஸ்திரீ நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அவளிடம் நடந்து சென்று, “மாலை வணக்கம்” என்றேன். அவள், எப்படியிருக்கிறீர்கள்? என்று கேட்டாள். நான், ''அம்மணி, எனக்கு ஒரே குழப்பமாயுள்ளது,'' என்று சொல்லிவிட்டு என் கதையைக் கூறினேன். நான், “காலையில் நடக்க வேண்டிய அறுவை சிகிச்சைக்காக ஒரு ஸ்திரீ இங்கு எங்கோ சேர்க்கப்பட்டிருக்கிறாள். அவள் மரணத்தருவாயிலிருக்கிறாள். நான் ஒரு ஊழியக்காரன். எங்கள் போதகருக்கு அவர்களுடைய அழைப்புக்கு இணங்கி வர இயலவில்லை. அவர்கள் இந்த அறை எண்ணைக் கொடுத்தனர் என்றேன். அவள், “சிறிது பொறுங்கள், சகோ. பிரான்ஹாம். நான் கண்டு பிடித்து தருகிறேன்” என்றாள் அவள். “நல்லது, நான் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன்.” அவள் எல்லாவற்றையும் கீழே வைத்துவிட்டு, அங்கு நடந்து சென்று கண்டு பிடித்து... அவள், “ஓ, ஆமாம் சகோ. பிரான்ஹாம். அவள் உங்கள் இடது பக்கத்திலுள்ள இன்னின்ன அறையில் இருக்கிறாள் - அங்குள்ள அறையில்” என்றாள். நான், “மிகவும் நன்றி” என்று கூறி, திரும்பிப் பார்த்தேன். அதுதான், நீராவியை வெளியேற்றுதல் என்று நினைத்துக் கொண்டேன். 21எல்லோருக்குமே... இது நரம்பு இறுக்கக் காலமாகிக் கொண்டு வருகிறது. எல்லோருக்குமே இறுக்கம் அதிகரித்து வருகிறது. யாருக்குமே நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவாக இறுக்கம் அதிகரித்துக் கொண்டே வந்து முடிவில் தீங்கு விளைவிக்கிறதாயுள்ளது. அவர்கள் அதை கோபத்தின் வடிவில் வெளியேற்றி, சொல்ல நினையாத காரியங்களைச் சொல்லும் போது, அதனால் ஒருவருக்கொருவர், மனஸ்தாபம் ஏற்படுகிறது. அதைக் குறித்து எல்லோருமே குற்றவாளிகள். நானும் குற்றவாளி, நீங்கள் அனைவருமே குற்றவாளிகள். நாம் அழுத்தத்தில் உள்ள போது சில காரியங்களை செய்துவிடுகிறோம். அவைகளை அமைதியான நிலையில் செய்திருக்கமாட்டோம். எனவே இன்று அதிகப்படியான அழுத்தம் உண்டாகிக் கொண்டே வருகிறது. நான் எதையும் கூறுவதற்கு முன்பு இதைக் கூற விரும்புகிறேன். அதாவது சத்துரு நம்மேல் வந்து நமக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறான் என்பது என் கருத்து. அது பிசாசு. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம். கடைசி நாட்களில் பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித்திரிவான் என்று வேதம் கூறுகிறது (I.பேது;5:8). அவன் உங்களை அழுத்தமான நிலைக்குக் கொண்டு வந்து, நீங்கள் பதட்டப்பட்டு அவசரமாக ஏதாவதொன்றைக் குறித்து தீர்மானம் எடுக்கும்படி அவன் செய்தால், நீங்கள் அமைதியாக உட்கார்ந்து ஆலோசனை செய்யும் பட்சத்தில் அத்தகைய தீர்மானம் செய்திருக்கவே மாட்டீர்கள். 22மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வேட்டைப் பயணத்தை மேற்கொண்டேன். அப்பொழுது எனக்கு ஒரு சிகப்பு. இந்தியன் வழிக்காட்டியாக இருந்தான். நான் வேகமாக வேட்டையாடுபவன். அது என் இயல்பு (பாருங்கள்?). அது அழுத்தத்தை அதிகரிப்பவைகளில் ஒன்று. எனவே, நான் இந்த இந்தியனுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். நான் குதிரையை விட்டுக் கீழே குதித்தேன். அங்கு மலையின் மேல் ஒரு கடம்பை மான் இருந்தது. நான் வளைவைச் சுற்றி செல்லத் தொடங்கினேன். அந்த இந்தியன் என்னை விட பத்து வயது மூத்தவன். அவன் எனக்குப் பின்னால் மூச்சு வாங்கிக் கொண்டு வந்தான். நான், “தலைவா, சீக்கிரம் வா, சீக்கிரம் வா!'' என்றேன். அவன், அதிக வேகம், அதிக வேகம்!“ என்றான். நான், “இது என்ன என்று நினைத்து, வேகம் வா” என்றேன். நான் வேகமாக சென்றேன். அவன், அதிக வேகம் என்றான். நான் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டேன். அப்பொழுதும் அவன், ''அதிக வேகம்“ என்றான். நான் மெல்ல நடந்தேன். அவன் ''அதிக வேகம்'' என்றான். ஓ, என்னே! நான், “தலைவா, அங்கு கடம்பைமான் உள்ளது!” என்றேன். அவன், அது அங்கேயே இருக்கும்; அது அங்கு தான் பிறந்தது என்றான். நான், ''அது உண்மையாயிருக்கலாம்“ என்று நினைத்தேன். ”அது அங்கேயே இருக்கும்.'' ''அது அங்கு தான் பிறந்தது. அவன் தொடர்ந்து, பிரசங்கி மிகவும் வேகமாக வேட்டையாடி மிருகங்களை பயமுறத்தி துரத்திவிடுகிறார். இந்தியர் செய்வது போல் செய்யுங்கள்: ஒரு முறை நடந்து. ஒன்பது முறை சுற்றிலும் பாருங்கள் என்றான்.'' 23அப்படியானால் அங்கு அடைய நான் எந்த வேகத்தில் செல்ல வேண்டுமென்று வியந்தேன். நான் மலையின் மேல் ஓடிச்சென்ற போது அவன் ஒருமுறை நடந்து, பிறகு ஒன்பது முறை சுற்றிலும் பாருங்கள். இன்னும் ஒரு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு ஒன்பது முறை சுற்றிலும் பாருங்கள்“ என்றான். ஒ, என்னே! ஆனால் பாருங்கள், அவன் அவசரப்படவேயில்லை. அதைக் குறித்து நான் சிந்திக்கலானேன். இன்றிரவு மகிமையிலுள்ள என் விலையேறப் பெற்ற தாயார்... யாரோ ஒருவர் என்னிடம், “உங்கள் தாயார் மரித்துப்போனதற்கு அடையாளமாக நீங்கள் ஏன் வெள்ளை மலரை அணிந்துக்கொள்ளக் கூடாது? என்று கேட்டார். நான், என் தாயார் மரிக்கவில்லை, அவர்கள் உயிரோடிருக்கிறார்கள். நான் சிகப்பு மலரை அணிந்தால், ஜனங்கள், ''உங்கள் தாயார் மரித்துவிட்டார்கள் என்றல்லவா நினைத்தேன்?'' என்பார்கள். எனவே, அவர்கள் குழம்பிப்போய் இறுக்கத்தை அதிகரித்துக்கொள்ளாமல் இருக்க. நான் மலர்கள் அணிவதையே விட்டுவிட்டேன், என்றேன். பாருங்கள்? அவர்கள் மரிக்கவில்லை, நித்திரையடைந்திருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவுடன் கூட இருக்கிறார்கள். 24நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நரம்பு இறுக்கக் காலத்தில்... உங்களுக்குத் தெரியுமா இதற்கெல்லாம் மருத்துவர்களிடம் பரிகாரம் இல்லை. அவர்களுக்கும் அந்த தொல்லை ஏற்படுகிறது. அவர்களிடம் அதற்கு பரிகாரம் இல்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள், “ஓ, டாக்டர், என் தலை வெடித்துவிடும் போல் இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான்... என்று கூறினால், அவர், “நல்லது, எனக்கும் கூட. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று கூறிவிட்டு, உங்களுக்கு அமைதி படுத்தும் மாத்திரையை (tranquilizer) கொடுப்பார். அதன் சக்திபோனவுடனே, நீங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமாக நரம்பு இறுக்கம் அடைகிறீர்கள். ஒரு குடிகாரன் தன் குடி போதையிலிருந்து மீள சிறிது அதிகம் குடிப்பது போன்றது இது. பாருங்கள்?உங்களால் செய்ய முடியாது. அதற்கான பதில் அவர்களிடம் இல்லை. ஆனால், தேவன் அதற்கான பதிலை வைத்திருக்கிறார். அதைக் குறித்து தான் நாம் பேச விரும்புகிறோம். தேவனிடம் அதற்கான பதில் உண்டு. அவரே பதில். நமக்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் கிறிஸ்துவே பதிலாயிருக்கிறார். 25இப்பொழுது அவரைக் குறித்து நாம் பேசப்போகிறோம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனிதன் அழுத்த மிகுதியினால் பாதிக்கப்பட்டு ஒரு தவறைச் செய்ய நேர்ந்தால்; அவன் குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினால், அவன் ஓடிப்போக வேண்டும். ஏனெனில், அவன் கொலை செய்த அந்த மனிதன், அவன் செய்த தவறு, அவன் தீங்கிழைத்த அந்த மனிதனின் பந்துக்கள் அவனைத் தேடித்திரிவார்கள். அவன் கண்டு பிடிக்கப்பட்டால் கொலை செய்யப்படுவான். அது கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னும் காலமாக இருந்தது. அவன் அடைக்கலம் பெற எந்த இடமும் இருக்கவில்லை. அவன் எதிர்பாராத விதத்தில் அந்த கொலையைச் செய்திருந்தால் - அதை ஜனங்கள் நம்பமாட்டார்கள் என்பது உண்மையே - கொல்லப்பட்ட அந்த மனிதன் அல்லது ஸ்திரீயின் பந்துக்கள், அவனைத் தேடித்திரிந்து, அவனைக் கண்டமாத்திரத்தில், அது கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதாக அமைந்திருக்கும். அவ்விதமாகத் தான் அவர்கள் செயல்பட்டனர். 26எனவே, அவன் எங்கேயும் நிற்கக்கூடாது. அவன் அபாயத்துக்குப் பயந்து ஓடுபவன். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விரைந்து ஓடுவான். இன்றைக்கு நடப்பதற்கு அவன் உதாரணமாயிருக்கிறான். அது தான் அவ்வளவு அழுத்தத்தை உண்டாக்கிறதென்று நான் நினைக்கிறேன்; நாம் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். உலகத்தின் தொல்லை அதுவே அவர்கள் தவறென்று அறிந்தும், கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று அறிந்தும், அழுத்தம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது: நாம் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். சாலை வீடு, சூதாடும் இடம், ஆடம்பரம், பாவம். நன்னடத்தை குலைதல், அழுத்தத்தை வெளியேற்ற ஏதாவதொரு வழி; தொலைக்காட்சி பார்த்தல், அவலட்சணமான நகைச்சுவை துணுக்குகள், ஏதாவதொரு வழி அதை வெளியேற்ற. அவர்கள் ஒடிக்கொண்டேயிருக்கின்றனர். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது; அவர்கள் அதை அறிந்துள்ளனர். உலகம் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறதென்று நாமும் அறிந்திருக்கிறோம். பொழுதுவிடிவதற்கு முன்பு இவ்வுலகம் சுக்குநூறாக உடைந்து போக வகையுண்டு. ஒவ்வொரு நாடும் இறுக்கத்தில் உள்ளது. ஏன்? 27ஒரு சமயம் நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது, புல் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்டை கவனித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஆட்டுக்குட்டி, ஓ, நடுத்தர வளர்ச்சி கொண்ட ஒரு ஆடு. அந்த குட்டி அமைதியாக மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென்று அது அமைதியற்ற நிலையை அடைந்தது. அது புல்லை ஒரு கடிகடிக்கும், பிறகு சுற்று முற்றும் பார்க்கும்; பிறகு ஒரு கடிகடிக்கும். அது அமைதியாயிருந்த போது, அதைக் கவனித்தேன். அது மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. நான், அங்கு மிகவும் அமைதியாயுள்ள தல்லவா? அந்த குட்டியைப் பார், என்று நினைத்துக் கொண்டேன். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பன் அப்பொழுது பட்டிக்குச் சென்றிருந்தான்... சுதேசி, கறுப்பு நிறமுள்ளவன். இந்த குட்டியை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று கழிந்து அதற்கு பயமுண்டானது. நான், “இந்த குட்டிக்கு என்ன நேர்ந்தது? என்று நினைத்தேன். நான் அதை 'பைனாகுலர்' வழியாக கவனித்து கொண்டிருந்தேன். அதற்கு பயமுண்டானது. அது இந்த பக்கமும், அந்த பக்கமும் பார்த்துவிட்டு கத்தத் தொடங்கினது. அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ”இந்த குட்டிக்கு திடீரென்று பயமுண்டாகக் காரணமென்ன?“ என்று எண்ணினேன். 28அது புல் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னால் தொலை தூரத்தில் ஏதோ ஒன்று எழும்புவதையும், பதுங்குவதையும் கண்டேன்; அரை மைல் தொலைவில், புதர்களினிடையில், ஒரு சிங்கம் பதுங்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அந்த குட்டிக்குள் இருந்த ஏதோ ஒன்று அதிகரித்துக் கொண்டே வந்து, எங்கோ ஆபத்துள்ளது என்பதை அது அறிந்து கொண்டது. அந்த குட்டி சிங்கத்தைக் காணவில்லை. ஆனால், அந்த சிங்கம் ஆட்டை முகர்ந்தது. மேய்ப்பன் அதை ஓட்டிச் செல்வதற்கு முன்பு, அது வேகமாக அதை கவ்வ வேண்டும். அதை நான் கவனித்த போது, அதற்கு இறுக்கம் அதிகரித்தது. தூரத்தில் சிங்கம் மெல்ல நழுவி வந்து கொண்டிருந்தது. ஆட்டிற்கு சிங்கத்தைக் காண முடியவில்லை. ஆனால், அதற்குள் இருந்த ஏதோ ஒன்று ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அதற்கு அறிவித்தது. இன்றைக்கு அவ்வாறே உள்ளது. ஜனங்களுக்குள் இருக்கும் ஒன்று, ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு அது தெரியும். கிறிஸ்தவன் அதை அறிந்திருக்கிறான், உலகம் அதை அறிந்திருக்கிறது, குடிகாரன் அதை அறிந்திருக்கிறான், சூதாடுபவன் அதை அறிந்திருக்கிறான். வியாபாரி, அரசாங்கங்கள், ஐ.நா.சபை எல்லோருமே ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை அறிந்துள்ளனர். அது இறுக்கத்தை அதிகரித்துள்ளது. 29ஸ்திரீகள், தாய்மார்கள், ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட்டு புகைக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது அவர்களைக் காண்கிறேன். அவர்கள் எங்கள் சந்து வழியாக தலைதெறிக்க காரோட்டி வருவதால், என் பிள்ளைகளையும், நாயையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியதாயுள்ளது. இருபது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமென்று குறிக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்கள் மணிக்கு எழுபது மைல் வேகம் செல்கின்றனர். ஸ்திரீகள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடத்துக்கு கொண்டு வரும் போது, கையில் சிகரெட்டுடன் வருவதும், காரின் கதவின் வழியாக வெளியே எட்டிப் பார்ப்பதும், பிள்ளைகளுடன் சண்டையிடுவதும், பிரேக்கை அழுத்தி க்ரீச் என்று சத்தமிட்டு சக்கரங்கள் தெருவில் சடுதியாக நிற்பதும்... அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வருகின்றனர். ஒருத்தி தலைதெறிக்க காரோட்டிக் கொண்டு போன போது, பலத்த காற்று வீசி நான்கைந்து பிள்ளைகளை சாலையிலிருந்து தூக்கி எறிந்ததை அன்றொரு நாள் கண்டேன். அவள் எங்கே செல்கிறாள்? என்ன நேர்ந்தது? அவள் காணவிரும்பின ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேரத்தோடு வீடு திரும்ப. அது தான், இறுக்கம். ஏதோ ஒன்று அது உண்டாகக் காரணமாயுள்ளது. முன்பெல்லாம் அவர்கள் அப்படி செய்வது கிடையாது. ஏதோ ஒன்று அணுகிக் கொண்டிருக்கிறது. மரணமும், அழிவும் பாதையில் வந்து கொண்டிருக்கிறது. அது வெகுதூரம் இல்லை. ஏதோ ஒன்று அணுகிக் கொண்டிருக்கிறது. 30பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்த தொல்லைகளில் சில எதிர்பாராத விதமாக நடப்பதை தேவன் கண்டு... எனவே நீங்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும் பட்சத்தில், தேவன் உங்களுக்கு ஒரு வழியை வகுத்துக் கொடுக்கிறார். ஒரு மனிதன் வேறொருவனை வேண்டுமென்று முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்தால், அத்துடன் அவன் தொலைந்தான். இந்த இடத்துக்கு அவன் வரமுடியாது அவன் அதை செய்ய நினையாமல், எதிர்பாராத விதமாக அந்த கொலையைச் செய்ய நேர்ந்தால், அவனுக்கு அடைக்கலப்பட்டணம் இருந்தது. அவைகளில் ஒன்று கிலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தது. மொத்தம் நான்கு இடங்களில் என்று நினைக்கிறேன், யோசுவா இந்த அடைக்கலப்பட்டணங்களை வைத்தான். ஜனங்கள் இந்த அடைக்கலப் பட்டணத்துக்கு வரலாம். ஒருவன் அதை செய்ய நினையாமல், அந்த தவறை எதிர்பாராத விதமாக செய்திருந்தால், அவன் இந்த அடைக்கலப்பட்டணத்தின் வாசலுக்கு வரலாம். வாயில் காப்போன் அவனிடம் அவன் ஏன் இங்கு வந்தான், அவன் வரக் காரணமென்ன என்று கேட்பான். அவனுடைய வழக்கு அங்கு விசாரிக்கப்படும். அந்த வழக்கு வாசலில் தீர விசாரிக்கப்பட்டு, அந்த மனிதன் குற்றமற்றவன் என்றும், அவன் வேண்டுமென்று அதை செய்யவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் அடைக்கலப்பட்டணத்துக்குள் கொண்டு செல்லப்படுவான். அப்பொழுது சத்துரு அவனைப் பிடிக்க முடியாது. அவன் பொய் சொல்லி, உண்மையில் அந்த தவறைச் செய்திருந்து, அடைக்கலப்பட்டணத்துக்குள் நுழைந்திருந்தால், அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டாலும், அவனைப் பலிபீடத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்று அவனைக் கொன்று போடுவதற்கு சத்துருவுக்கு உரிமையுண்டு. ஆம், ஐயா! அவன் முன்கூட்டி திட்டமிட்டு இக்கொலையை செய்த குற்றவாளி ஆனதால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். 31அதனுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது. அந்த மனிதன் பயந்துபோயிருப்பான். அவனை ஒரு டஜன் பேர் துரத்தி வந்திருக்கக்கூடும். ஒவ்வொரு மலையிலும், ஒவ்வொரு குன்றிலும், ஒவ்வொரு புதரிலும் எங்காகிலும் சத்துரு பதுங்கியிருந்து அவனைக் கொன்று போடக் காத்திருக்கக் கூடும். அவன் பயந்துபோயிருப்பான். ஆனால் அவன் அடைக்கலப்பட்டணத்தில் பிரவேசித்த மாத்திரத்தில், தனக்கிருந்த அழுத்தத்தை வெளியேற்றிவிடலாம். அவன் பாதுகாப்பாயிருந்தான். அவனுக்கு பயமில்லை, ஏனெனில் அவனுக்காக ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குற்றமற்றவன் கொலை செய்யப்படாமல் இருப்பதற்காக, கொலை செய்யப்படுவதிலிருந்து விலக்கப்பட, தேவன் அவனுக்கு ஒரு வழியை அளித்திருந்தார். ஏனெனில் அவன் எதிர்பாராத விதமாக அதைச் செய்தான். அவன் அதைச் செய்ய நினையாதிருக்கும் பட்சத்தில் அவன் அதை வேண்டுமென்று செய்திருந்தால், அவன் சூழ்நிலையை சந்தித்தே ஆகவேண்டும். அவன் வேண்டுமென்று செய்திருந்தால், அவனுக்குத் தப்பிக்க வழியேயில்லை. 32இன்று மக்களில் இருசாரார் உள்ளனர். இதை நான் கூற விரும்புகிறேன். சகோ. ரட்டல், இன்று உலகில் தாங்கள் செய்து கொண்டிருப்பதை செய்ய விரும்பாத ஆண்களும், பெண்களும் உள்ளனர். பாவம் செய்ய விரும்பாத ஆண்களும், பெண்களும் இன்று உலகில் உள்ளனர். அவர்களுக்கு தவறு செய்ய விருப்பமில்லை, ஆனால் அவர்கள் செய்கின்றனர். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அந்த நிலைக்கு விரட்டப்பட்டனர். நன்மை செய்ய விரும்பும் அந்த நபருக்கு புகலிடமான ஒரு இடம் உண்டு. அந்த அழுத்தத்தை வெளியேற்ற ஒரு இடம் உண்டு. அது உண்மை. ஆனால் மற்ற சாராரோ இதைக் குறித்து கவலைக் கொள்வதில்லை. 33அன்றொரு நாள் சகோ. ஹிக்கர்ஸன் என்னும் ஒருவர், கென்டக்கியிலுள்ள லா கிரேஞ்சர் என்னுமிடத்தில் உள்ள அரசாங்க சிறைக்குள் சென்று அங்கு மீன் பிடிப்பதற்கென அதன் அதிகாரியிடமிருந்து அனுமதிச் சீட்டு ஒன்றை எனக்கு வாங்கித் தந்தார். அங்கு லூயிவில்லைச் சேர்ந்த கறுப்பு நிற வாலிபனைச் சந்தித்தேன். அவன் என்னிடம் கூறினான். நான், “உன்னைப் போன்ற திடகாத்திரமுள்ள அறிவுள்ள பையனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டேன். அவன், “சங்கை போதகரே, இது தான் நடந்தது. நான்... இது என்னுடைய தவறு, வேறு யாருடைய தவறுமில்லை. நான் ஒருகாலத்தில் கர்த்தருக்கு சொந்தமானவன்'' என்றான். அவனுடைய பெயர் பிஷப். அவன், ''அவர்கள் என்னைப் பரிசுத்த பிஷப் என்று அழைப்பதுண்டு. ஏனெனில் நான் கர்த்தரை சேவித்து வந்தேன்” என்றான். அவன் தொடர்ந்து, எனக்கும் என் மனைவிக்கும் மகள் ஒருத்தி இருக்கிறாள். ஒரு காலத்தில், என்னால் அதில் நிலைநிற்க முடியாமல் நான் கர்த்தரை விட்டுவிலகி உலகத்துடன் சென்றுவிட்டேன். எனக்கு கிறிஸ்தவ பெற்றோர் இருந்தனர். நான் நான்கு ஆண்டுகள் வெளிநாட்டில், கொரியாவில் - இராணுவ பணிபுரிந்தேன். அவன் எவ்வளவு யுத்தங்களில் ஈடுபட்டான் என்றும் அவனுக்கு எவ்வளவு பாராட்டுகள் கிடைத்தன என்றும் எடுத்துக் கூறினான். ''அங்கு நாங்கள் செய்தது நடனங்களுக்கு செல்வதும் மற்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதுமே.'' 34“நான் தவறான கூட்டத்தினருடன் சம்பந்தம் கொண்டேன். ஒரு நாள் இரண்டு இளைஞர்கள் என்னிடம் வந்து, ''பிஷப், நாங்கள் பல சரக்கு சாமான்கள் வாங்க க்வேக்கர் மெய்ட் என்னுமிடத்துக்குப் போக உத்தேசித்துள்ளோம். எங்களை உன் காரில் அங்கு கொண்டு செல்ல முடியுமா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது தான் என் மனைவி இரவு உணவு உண்ண என்னை அழைத்தாள். அவள் என்னை உள்ளே கூப்பிட்டு, ''தேனே, அவர்களுடன் போக வேண்டாம். அவர்கள் நல்லவர்கள் அல்ல. அவர்களைவிட்டு நாம் விலகி, சபைக்கு செல்ல வேண்டும்'' என்றாள். ''அவர்களை எனக்குப் பிரியமில்லைதான். ஆனால் இவர்கள் பலசரக்கு சாமான்கள் வாங்க விரும்புகின்றனர். அவர்களை என் காரில் கொண்டுபோவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. அப்படியானால் என் காரை அவர்களுக்கு உபயோகிக்கக் கொடுக்கிறேன்'' என்றேன். அவளோ, ''அப்படி செய்யாதீர்கள். அவர்கள் காரை சுக்குநூறாக உடைத்துவிடுவார்கள். எனவே, அவர்களை அங்கு கொண்டு போய் திரும்ப வந்துவிடுங்கள்'' என்றாள். அவன் தொடர்ந்து என்னிடம், அவர்களை கொண்டு சென்று கார்களை நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்தினேன். நான் காரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்த போது, திடீரென்று அபாயச் சங்கு ஊதினது. இந்த பையன்கள் தங்கள் கைகளில் கைத்துப்பாக்கியை (pistol) பிடித்துக் கொண்டு வந்தனர். நான் காரின் கதவை அடைத்து, ''நீங்கள் காரில் ஏறக்கூடாது என்றேன்,'' என்றான். அவர்களில் ஒருவன் பிடிப்பின் தலையில் அடித்து அவனைப் பின்னால் தள்ளி, கைத்துப்பாக்கியை அவன் முன்னால் நீட்டி, ''எங்களைக் கொண்டுபோகாவிட்டால்...'' என்று பயமுறுத்தினான். அவர்கள் துப்பாக்கியை நீட்டி, “குண்டு பாய்ந்து உன் வழியாக துளை உண்டாக உனக்கு விருப்பமில்லையென்றால்... உன்னை தூர எறிந்துவிட்டு, நாங்கள் காரை ஓட்டிச் சென்றுவிடுவோம்'' என்றனர். 35பிஷப் அவர்களிடம், ''நீங்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது. நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள் போலீசாரிடம். நான் இதில் சம்பந்தப்படவில்லை. நான் அதை திட்டமிடவில்லை. நான் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் குற்றமற்றவன் என்று கூறுங்கள்'' என்றானாம். அந்த நேரத்தில் போலிசார் அவர்களைப் பிடித்தனர். வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அவன் என்னிடம், ''அரசாங்க வழக்கறிஞர் மிகவும் பொல்லாதவர். ஏனெனில் அவர் என்னிடம்...“ என்றான். இந்த கேள்விகளை அவர் கேட்டதாக கூறினான்: ”இது உன்னுடைய கார் தானே.'' “ஆம், ஐயா. ஆனால் நான்...'' கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல் என்று அரசு வழக்கறிஞர் அதட்டினாராம். ஓ, சகோதரனே, பிசாசு அதை செய்யும் முறையை அறிந்திருக்கிறான். அவர், என் கேள்விக்கு பதில் சொல். இது உன் கார் தானே என்று கேட்டார். அவன், ''ஆம், ஐயா“ என்றான். “இது உன் லைசென்ஸ் நம்பரா? “ஆம், ஐயா.'' அவர்களுடன் நீ இருந்தாயா? “நான் சொல்வதை....” என் கேள்விக்குப் பதில் சொல் “ ''ஆம், ஐயா...'' அவர், ''வேறென்ன வேண்டும்'' என்றார். சூழ்நிலை அத்தாட்சியின் பேரில் அவர்கள் அவனுக்குப் பத்து ஆண்டு கடுங்காவல் விதித்து, மற்ற இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தனர். அவன் என்னிடம், “பாருங்கள் சகோதரனே, நான் தவறான கூட்டத்தினருடன் சம்பந்தம் கொண்டேன். ஆகவே, என்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது” என்றான். அது உண்மை. உள்ளே உள்ள அழுத்தத்தை வெளியேற்ற அவனுக்கு பத்து ஆண்டுகள் உள்ளன. அவனுக்காக நான் ஜெபித்தேன். சகோ. உட்டும் நானும் தண்ணீரின் மேல் படகில் உட்கார்ந்து கொண்டு, அவனுடைய கையைப் பிடித்து, தேவன் அவனுக்கு திரும்பி வருவேன் என்னும் உத்தரவாதத்தின் மேல் (Parole) விடுதலை கிடைக்க உதவி செய்ய வேண்டுமென்று ஜெபித்தோம். நான் இன்னும் அவனுக்காக, தேவன் இதை செய்ய வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்ன? அழுத்தம், குற்றம் புரியாத ஒரு மனிதன். அந்த மனிதனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 36நீங்கள் நல்லதை செய்யவிரும்பினால், ஒரு அடைக்கலப்பட்டணம் உண்டு என்று இன்றிரவு உங்களுக்கு அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்; அது தான் இயேசு கிறிஸ்து. நீங்கள் தீமையைச் செய்ய விரும்பாமல், சத்துரு உங்களைப் பின் தொடர்ந்தால் தப்பிக்க ஒரு வழியுண்டு. அந்த தப்பித்துக் கொள்ளுதல் இயேசு கிறிஸ்துவே. நீங்கள் பிரவேசித்து உங்கள் நீராவியை வெளியேற்ற ஒரு இடம் உண்டு. ஆனால் நீங்கள் பாவம் செய்ய விரும்பி, உங்களுக்கு தேவன் வேண்டாமென்றால், உங்களைப் பின் தொடரும் சத்துரு எங்காவது ஓரிடத்தில் உங்களை மேற்கொள்வான். உங்களுக்கு... உங்களால் கிறிஸ்துவினிடம் வர முடியாது. ஏனெனில் உங்களுக்கு வர விருப்பமில்லை. இந்த மனிதன் அடைக்கல ஸ்தலமாகிய கிறிஸ்துவினிடம் வரும்போது... பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு மனிதன் அடைக்கலப்பட்டணத்துக்குள் பிரவேசித்தால், முதலாவதாக அவன் சுய சுயாதீன சித்தப்படியே அதில் பிரவேசிக்க வேண்டும். அப்படித்தான் நீங்கள் கிறிஸ்துவினிடம் வர வேண்டும். 37வேறொரு காரியம், நீங்கள் அதற்குள் இருக்கும் போது, திருப்தியுடையவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு போதும்... நீங்கள் நாள்தோறும், “எனக்கு இந்த இடத்திலிருந்து வெளியே செல்லப் பிரியம், எனக்கு இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் உங்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவர்கள் மனப்பூர்வமாய் அந்த பட்டணத்துக்குள் வசிக்க விருப்பங்கொள்ள வேண்டும். அவ்வாறே நீங்கள் கிறிஸ்துவுக்குள் வந்தபிறகு, உலகத்தை பின்னிட்டுப் பார்க்கக் கூடாது. “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுடையவன் அல்ல,'' என்று வேதம் கூறுகிறது (லூக்;9:62). அங்கு தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் தவறு செய்கின்றனர். பாருங்கள், அவர்கள் உழப்போவதாக காண்பிக்கின்றனர், ஆனால் ஒரு சிறிய காரியம் குறுக்கிட்டாலும் அவர்கள் அதை விட்டுவிடுகின்றனர். 38அன்றொரு நாள் எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. உங்களெல்லாருக்கும் அது தெரியும். உங்கள் ஜெபங்களுக்காக உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். நான் வேட்டையாடுவதும், மீன் பிடிப்பதும், இலக்கைச் சுடுவதும் வழக்கம். எனக்கு எப்பொழுதுமே ஒரு வெதர்பி மாக்னம் துப்பாக்கியின் மேல் ஆவல் இருந்தது. என் நண்பர்களில் சிலர் அதை எனக்கு வாங்கிக் கொடுத்திருப்பார்கள். எனக்கு சில பேர்களைத் தெரியும், என் ஆவலை தெரிவித்திருந்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். வெளிப்படையாக கூறினால், இரண்டு மூன்று பேர் அதை வாங்கித் தர முன் வந்தார்கள். மிஷனரிமார்கள் கால்களில் காலணிகளும் கூட இல்லாமல் ஊழியம் செய்யும் போது, அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஒரு துப்பாக்கியை எனக்கு வாங்கிக் கொடுக்க நான் பிரியப்படவில்லை. என்னால் அப்படி செய்ய முடியவில்லை. சகோ.வில்சன் பில்லி பாலுக்கு, 257 துப்பாக்கி ஒன்றைக் கொடுத்திருந்தார். என் சகோதர நண்பர் ஒருவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, வெதர்பி நிர்வாகம் இந்த துப்பாக்கியை துளையிட்டு வெதர்பி மாக்னம் துப்பாக்கியாக மாற்றித் தர முடியும். என்னை நீங்கள் அனுமதித்தால், மலிவான விலைக்கு அதை செய்து தருவேன் என்றார். நான் அவருக்கு அனுமதி கொடுத்தேன். அந்த துப்பாக்கி மாற்றப்பட்டு திரும்பி வந்தது. அதில் தோட்டாவைப் போட்டு சுட்டப்போது, அது என் கைகளில் வெடித்து தெறித்தது. துப்பாக்கி குழாய் ஐம்பது கெஜ தூர கோடு வரைக்கும் சிதறினது. அதன் 'போல்டு' தெறித்து எனக்குப் பின்னால் சென்றது. அது என்னை இரண்டாகப் பிளக்காதது அதிசயமே. எனக்கு அவ்வளவு அருகில், ஐந்து அல்லது ஆறு டன் அழுத்தம் இருந்தது. ஒரு மருத்துவர் என்னிடம், “எனக்கு ஒன்று மாத்திரம் தெரியும். அதாவது நல்ல தேவன் தமது ஊழியக்காரனைப் பாதுகாக்க அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்'' என்றார். 39நான் நினைப்பது என்னவெனில்; இது தான் தீர்மானம். அது தொடக்கத்திலேயே வெதர்பி மாக்னம் துப்பாக்கியாக இருந்திருந்தால்... விஷயம் என்ன? அந்த துப்பாக்கியில் குறை இருந்தது. அதன் தலைபாகம் மிக தளர்ச்சியாக (loose) துளையிடப்பட்டது நம்மில் அநேகருக்கும் கூட நமது மனமாற்றத்தில் உள்ள தொல்லை அதுவே. நமது தலைபாகம் மிக தளர்ச்சியாக துளையிடப்பட்டுள்ளது. அது தொடக்கத்திலேயே வெதர்பி துப்பாக்கியாயிருந்து, அதன் குழாய் தரமான எஃகினால் வார்க்கப்பட்டு துளையிடப்பட்டிருந்தால், அது உயர்தர வெதர்பி மாக்னம் துப்பாக்கியாக இருந்திருக்கும். அது வெடித்திருக்காது. ஆனால் அவ்வாறு இல்லாத ஒன்றை அவ்வாறாக மாற்ற முயன்ற காரணத்தால், அது வெடித்து சிதறியது. கிறிஸ்தவன் என்று கூறிக் கொண்டு மறு பிறப்பிலிருந்து சரியாகத் தொடங்காத எவருக்கும் இதே கதி தான் நேரிடும். அதில் மிக அதிக அழுத்தம் உண்டாயிருக்கும், அது தாங்காது. அவன் எங்காவது வெடித்து சிதறி விடுவதைக் காண்பான். 40ஜனங்கள் தாங்கள் அழைக்கப்படாத வேறொருவரின் ஊழியத்தை ஏற்று பாவனை செய்யும் போது அது அவர்களை முடிவில் வெடித்து சிதறச் செய்துவிடும் நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அது தேவனாயிருக்க வேண்டும் ஏதோ ஒரு கைகுலுக்குதல், ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படும் கதையல்ல. அது சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தையும், இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவன் உங்களுக்குச் செய்ததன் பேரில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எங்காவது வெடித்து சிதறிவிடுவீர்கள். யாராவது ஒருவர் உங்களை அவமதித்து வருத்தம் உண்டாக்கினால், நீங்கள் விலகிச் சென்றுவிடுவீர்கள். பாருங்கள்? எந்நேரமும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வந்து, முடிவில் அது வெடித்து சிதறிவிடும். 41அடைக்கலப் பட்டணத்தில் தங்க விருப்பமுள்ள எவனும் குறை கூறிக் கொண்டிருக்க முடியாது. அவன் அங்கு தங்க வேண்டுமென்றால் குறைகூறக் கூடாது. அதற்கு வெளியே அவன் மரித்துவிடுவான், உள்ளே பாதுகாப்பாயிருப்பான். இங்குள்ள கிறிஸ்தவர் அல்லாதவர்க்கு ஒன்று கூற விரும்புகிறேன். முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த அடைக்கலப்பட்டணத்துக்குள் பிரவேசித்தேன். சகோதரனே, அங்கிருந்து வெளியே செல்ல நான் விரும்பினதேயில்லை. ஓ, நான் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டேன். நான் வாஞ்சித்த அனைத்தும் இங்குள்ளது. எனக்கு வெளியே செல்லப் பிரியமில்லை. “ஓ தேவனே, இங்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இங்கேயே நான் தங்கியிருக்க அனுமதியும்” என்று நாள்தோறும் ஜெபிக்கிறேன். எனக்கு இங்கிருந்து செல்லப் பிரியமேயில்லை. அவர் என்னை ஒருக்காலும் விட்டு விலகமாட்டார் என்று அறிந்திருக்கிறேன். அவர் உங்களையும் விட்டு விலகமாட்டார். அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில், அவரே நமக்கு வெளியேற்றும் குழாயாக (outlet) அமைந்திருக்கிறார். எனவே அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எல்லாம் அழுத்தமுள்ளவர்களாகி, எங்கு செல்கின்றீர்கள் என்றும், மரணத்துக்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரிடுமென்றும் அறியாதிருந்தால், நீங்கள் எப்பொழுதாவது மரிக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்கள், அது எப்படியும் நடக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், அடைக்கலமாகிய கிறிஸ்துவினிடம் வந்து, அழுத்தத்தை வெளியேற்றுவதே. அதை ஒரேயடியாக முடித்து தீர்த்துவிடுங்கள். 42என்ன நடந்த போதிலும், கிறிஸ்துவே நமக்கு அடைக்கலம். அவரிடம் நாம் வருவோமானால், அழுத்தத்தை நாம் வெளியேற்றி விட முடியும். “நான் மரித்து போனால், எனக்கு என்ன நேரிடும்? என் மனைவியின் கதி என்ன? என் கணவரின் கதி என்ன? என் பிள்ளைகளின் கதி என்ன?” என்றெல்லாம் கவலைப்படுவதை நீங்கள் விட்டுவிலகலாம். நீங்கள் கிறிஸ்துவினிடம் வந்து அழுத்தத்தை வெளியேற்றுங்கள். அவர் எல்லாவற்றையும் நமக்குத் தருகிறார். கிறிஸ்துவின் மூலம் எல்லாமே நமக்குச் சொந்தம். எனவே, அழுத்தத்தை வெளியேற்றுங்கள். அதை நீங்கள் செய்யக் கூடிய ஒரே வழி... யாராவது உங்களுக்கு பத்து லட்சம் டாலர்கள் கொடுக்கக் கூடும்; அது அழுத்தத்தை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு சபையை சேரலாம்; அது அப்பொழுதும் அழுத்தத்தை அதிகரிக்கும். ''ஏனெனில் மெதோடிஸ்டுகள் அவர்கள் செய்வது தான் சரியென்றும் பாப்டிஸ்டுகள் தவறென்றும் சொல்வார்கள். பாப்டிஸ்டுகளோ, அவர்கள் தவறு, நாங்கள் செய்வது தான் சரி'' என்பார்கள். அது அதிக அழுத்தம் உண்டாக்குகிறது. ஏனெனில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அறியாமலிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்பொழுதாவது கிறிஸ்துவினிடம் வருவீர்களானால், அழுத்தத்தை வெளியேற்றலாம். ஏனெனில் அப்பொழுது அதெல்லாம் முடிந்துவிடும்; அதை தீர்த்துவிடுங்கள்.“ 43அது தேவனால் அருளப்பட்ட பாதுகாப்பு ஸ்தலம். “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் என்று தேவன் கூறியுள்ளார். வியாதியாயுள்ள நேரத்தின் போது; வியாதி உங்களைத் தாக்கி, மருத்துவர், ”இதைக் குறித்து வேறொன்றும் என்னால் செய்ய முடியாது'' என்று கூறிவிட்டால், அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்; அழுத்தத்தை வெளியேற்றுங்கள். உங்கள் (போதகரைக் கூப்பிடுங்கள். அவர் உங்களுக்கு எண்ணெய் பூசி ஜெபம் செய்யட்டும். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். அழுத்தத்தை வெளியேற்றுங்கள். பாருங்கள்? அவர் நமக்கு அடைக்கலம். நீங்கள் இந்த அடைக்கலத்துக்குள் இருக்கும்போது, உங்களுக்கு - இந்த அடைக்கலத்தில் உள்ள எதன் பேரிலும் உங்களுக்கு உரிமையுண்டு. கிறிஸ்துவே நமக்கு அடைக்கலம். உங்களுக்குத் தேவையான அனைத்தும் அவரில் உள்ளது. ஆமென்! வியாதியின் போது அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். அழுத்தத்தை வெளியேற்றுங்கள். 44நீங்கள், நான் வியக்கிறேன், சகோ. பிரான்ஹாமே எனலாம். நீங்கள் வியக்காதீர்கள்; அழுத்தத்தை வெளியேற்றிவிடுங்கள். உங்கள் விவகாரத்தை தேவனிடம் சமர்ப்பித்து விட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்பதுபோல் சென்று கொண்டிருங்கள். அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் தேவனிடம் சமர்ப்பிப்பது அழுத்தத்தை வெளியேற்றிவிடும். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, எனக்கு கவலையாயுள்ளது. ''என்ன செய்வதென்றே...'' எனலாம். அழுத்தத்தை வெளியேற்றுங்கள்! ஆமென்! அடைக்கலப்பட்டணத்தில் அவர் உங்கள் கவலையை எடுத்துப்போட்டார். எனவே நீங்கள், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள் (1.பேது;5:7). உங்கள் கவலைகளைக் குறித்து கவலைக் கொள்ளாதீர்கள்; அது அவருடைய வேலை. 45சில ஆண்டுகளுக்கு முன்பு, ''பத்து சென்டுகள்'' அங்காடியில் ஒரு ஸ்திரீயை சந்தித்தேன். அவளுக்கு சுமார் அறுபது வயது இருக்கும், ஆனால் காண்பதற்கு முப்பது வயது போலிருந்தாள். “சகோதரியே, உன்னால் எப்படி முடிந்தது? என்று கேட்டேன். அவள், “சகோ. பிரான்ஹாமே, என் இரண்டு மகன்கள் மருத்துவர்கள். அவர்கள் உங்களை விட மூத்தவர்கள்” என்றாள். உண்மையைக் கூறினால் அவள் காண்பதற்கு முப்பது வயதுக்கு அதிகமாக தோன்றவில்லை. அவள், “இதுதான் அதன் இரகசியம். எனக்கு பன்னிரண்டு வயதான போது நான் கிறிஸ்துவினிடம் வந்தேன்... நான் உட்கார்ந்து கொண்டு அதைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். நான் மற்ற மார்க்கங்களையும் ஆராய்ந்து பார்த்தேன், ஆனால் நான் உண்மையான மார்க்கத்தைக் கண்டு கொண்ட போது... நான் கிறிஸ்துவினிடத்தில் வந்து, என் விவகாரம், என் எல்லாவற்றையும் அவரிடம் கொண்டு சென்றேன். அன்று முதல் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவேயில்லை. அவர் அதைச் செய்ய போதிய அளவுக்கு பெரியவராயிராமல் போனால், அதைச் செய்ய நான் போதிய அளவுக்கு பெரியவள் அல்ல. எனவே அதைக் குறித்து நான் கவலைப்படுவதனால் என்ன பயன்?” என்றாள். பாருங்கள்? அதுதான்! உங்கள் கவலைகளை எல்லாம் தம் மேல் ஏற்றுக்கொள்வதாக கிறிஸ்து வாக்களித்துள்ளார். உங்கள் கவலைகளை அவர் மேல் வைத்துவிடுங்கள். எனவே நீங்கள் எதைக் குறித்து கவலை கொள்கிறீர்கள்? கவலை அழுத்தத்தை அதிகரிக்கும். அழுத்தம் வெடிக்கும்படி செய்யும். எனவே, உங்கள் கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு, கவலைப்படுவதை விட்டு விலகுங்கள். சரி! 46இப்பொழுது... அதை எப்படி செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். அவருடைய வாக்குத்தத்தை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அவர் அதை செய்வதாக வாக்களித்துள்ளார் மரண நேரத்திலும் கூட மரண தூதன் அறைக்குள் வரும்போது... ஓ, சகோ. பிரான்ஹாமே, நான் பயந்து போவேன். ஓ, இல்லை! நீங்கள் அடைக்கலத்துக்குள் இருக்கிறீர்கள். இல்லை, இல்லை! நீங்கள் மரிப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்; எப்படியாவது நீங்கள் சென்றே ஆக வேண்டும். எனவே அந்த புகலிடத்துக்குள் பிரவேசித்து பாதுகாப்பாயிருங்கள். அது உண்மை! அந்த புகலிடத்துக்குள் இருக்கும் வரைக்கும் நீங்கள் பாதுகாப்பாய் இருப்பீர்கள். அவர் உங்களுக்காக மரித்தார் என்பதை நினைவு கூருங்கள். அவர் உங்கள் மேல் கவலை கொள்கிறார். அவர் உங்களுக்காக மரித்தார். இப்பொழுது, நாம் பார்ப்போம்.... நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, மரண தூதன் கதவைத் தட்டும் போது கூட நாம் பயப்படக் கூடாது என்றா சொல்கிறீர்கள்? சிறிதளவும் பயப்பட வேண்டியதில்லை. ஏன் அப்படி...?புகலிடத்துக்கு வாருங்கள்; அவ்வளவுதான்! 47நீங்கள், சகோ. பிரான்ஹாமே... எனலாம். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். ஒரு காலத்தில் தேவன், நான் சங்காரத் தூதனை தேசத்திற்கு அனுப்புவேன். வாசலில் இரத்தம் பூசப்படாத ஒவ்வொரு குடும்பத்திலுள்ள தலைச்சன் பிள்ளையை நான் கொன்று போடுவேன் என்றார், பஸ்காவின் அந்த மகத்தான இரவின் போது. அங்கு வாக்குத்தத்தம் பெற்றிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள்... அது பஸ்காவின் இரவு. சங்காரத் தூதன் தேசத்தில் இருக்கிறான். தெருவிலிருந்து கூச்சல் வருவதை நாம் கேட்கிறோம். நாம் எட்டிப்பார்க்கும் போது இரண்டு பெரிய கறுப்பு செட்டைகள் தெருவின் வழியாக செட்டையடித்து செல்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் பயந்தார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, ஐயா! மரணம் வாசலை அடைந்தது. சிறுவன் சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தான். அவன் தான் குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை. அவன் அந்த பெரிய கறுப்பு தூதனைக் காண்கிறான். அவன், அப்பா, உங்களுக்கு என் மேல் அன்பு உண்டா? நிச்சயம் மகனே, நான் உன்னை நேசிக்கிறேன். “அப்பா, நான் உங்கள் தலைச்சன் பிள்ளை “ஆம், மகனே, நீ தலைச்சன் பிள்ளைதான். ''அங்கே பாருங்கள், அப்பா, அந்த தூதன் அந்த சிறுவனைக் கொன்றுவிட்டான். அந்த பையனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனுடன் நான் விளையாடியிருக்கிறேன். ஓ, அப்பா, இதோ தூதன் வீட்டை நோக்கி வருகிறான். “ஆனால் மகனே, நிலைக்காலைப் பார்த்தாயா? அல்லேலூயா! “அப்பா, தூதன் என்னைகொன்று விடுவானா? “இல்லை, மகனே. அவன் உன்னைக் கொல்ல முடியாது. “ஏன்?” ''நான் இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து செல்வேன்'' என்பது அவருடைய வாக்குத்தத்தம். நீ போய் விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டு விளையாடு, மகனே. கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் தேவனுடைய புகலிடத்தில் இருக்கிறோம். நீராவியை வெளியேற்று.'' 48இஸ்ரவேல் ஜனங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வேதத்தைப் படிக்க முடிந்தது. மற்றவர்களோ கூச்சலிட்டு நீராவியை அதிகரித்துக் கொண்டிருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அமைதியான நிலையில் இருந்தனர். ஏன்? மரணம் வாசலில் காத்திருந்த போதும், அது எத்தகைய வித்தியாசத்தை உண்டாக்கினது! அது அவர்களை சேதப்படுத்தாது. எனவே, மரணம் நமது வாசலில் காத்திருக்கும் போது (தேவனுக்கு மகிமை!), தேவனுக்குத் தேவையான இரத்தம் என் இருதயமாகிய நிலைக்காலில் பூசப்பட்டுள்ள வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்? அது உங்களைத் தொல்லைப்படுத்தாது. நாளை நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவர் கூறிவிட்டால், அதனால் என்ன வித்தியாசம்? இரத்தம் நிலைக் காலில் உள்ளதே. நீங்கள் எப்படியும் இறக்க வேண்டும். ஆனால், அந்த இரத்தம் பூசப்பட்டிருக்கும் போது, எனக்கு ஒரு உயிர்த்தெழுதல் வரப்போகிறது. ஆமென்! 49இஸ்ரவேல் ஜனங்களால் அமைதியாயிருக்க முடிந்தது. அவர்கள் நீராவியை அதிகரித்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் சங்காரத் தூதன் அவர்களைத் தாக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரத்தத்தின் கீழ் இருந்தனர். அது தேவனால் அருளப்பட்ட வழி. இப்பொழுது கவனியுங்கள்: “அதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாய் இருக்க முடியுமா?'' என்று நீங்கள் கேட்கலாம். கிறிஸ்தவர்களே, இங்கு பாருங்கள். அதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாய் இருக்க முடியுமா? ”அதைக் குறித்து போன ஞாயிறு இரவு பேசினேன்.'' இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, உடன்படிக்கை செய்யப்பட்ட தேவனுடைய மக்கள். பாலும், தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது. எனவே அவர்கள், அவர்கள் அந்த தேசத்தைக் கண்டதேயில்லை, அவர்களில் ஒருவராவது அங்கு சென்றதில்லை, ஆனால், அவர்களுக்கு அந்த தேசம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது. அவர்கள் தீர்க்கதரிசியின் மூலம் தேவனுடைய கரத்தினால் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சாரிகளாய், அவர்கள் அந்நியரும் சஞ்சாரிகளுமாய் இருப்பதாக அறிக்கை செய்து, அவர்கள் ஒருவரும் முன்பு கண்டிராத தேசத்தை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அதை யோசித்துப் பாருங்கள்! அவர்கள் எல்லையை அடைகின்றனர். அவர்களுக்கு யோசுவா என்னும் பெயர் கொண்ட சிறந்த போர்வீரன் இருந்தான். யோசுவா என்றால் யேகோவா இரட்சகர் என்று பொருள். யோசுவா யோர்தானைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்து, அது நன்மையான தேசம் என்னும் அத்தாட்சியுடன் திரும்பி வந்தான். அவர்கள் ஒரு திராட்சை குலையைக் கொண்டு வந்தனர். அது இருவர் சுமக்கத்தக்கதாக அவ்வளவு பெரிதாயிருந்தது. தேவன் சொன்ன விதமாகவே அது அமைந்திருந்து, பாலும், தேனும் ஓடிக்கொண்டிருந்தது. அது அவர்கள் எல்லோரையும் களிகூரச் செய்திருக்கும். ஏன்? தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்ததும், யாருமே அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திராததுமான அந்த தேசத்திலிருந்து யோசுவா அத்தாட்சியைக் கொண்டு வந்தான். பாருங்கள்? அவர்களுக்கு அந்த தேசம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது. அவர்கள் அதை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். 50ஒரு நாள் மனிதகுலம் கண்ணியில் அகப்பட்டுக் கொண்டது. அப்பொழுது இயேசு கிறிஸ்து என்னும் பெயர் கொண்ட ஒருவர் பூமிக்கு வந்தார். இயேசு என்றால், “யேகோவா இரட்சகர்” என்று பொருள். அவர் மரணம் என்னும் யோர்தானை அடைந்து, மரணமாகிய யோர்தானைக் கடந்து, ஈஸ்டர் காலையில் உயிரோடெழுந்து. மனிதன் மரித்த பிறகும் உயிரோடெழ முடியும் என்னும் அத்தாட்சியை அளித்தார். அல்லேலூயா! மரணம் என்பது முடிவல்ல. மனிதன் மரித்த பிறகும் உயிரோடெழ முடியும் என்பதை இயேசு நிரூபித்தார். அவர் அவர்களுக்கு முன்பாக நின்றார். அவர் சொன்னார். அவர் போவதற்கு முன்பு, “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்.... நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்'' என்றார் (யோவான்.14:2-3). அவர் ஈஸ்டர் காலையில் - அவர் மரித்த போது சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தன. அவர் மரித்த போது ரோமச் சேவகன் அவருடைய இருதயத்தை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது தண்ணீரும் இரத்தமும் பிரிந்து... அவர் மரித்தோரிலேயே மிகவும் மரித்தவராயிருந்தார். அவர் மற்ற எந்த மனிதனைப் போலவே கல்லறையில் வைக்கப்பட்டார். அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குச் சென்றதாக வேதம் கூறுகிறது. ஆனால், ஈஸ்டர் காலையில் அவர் மரணம், பாதாளம், கல்லறை ஆகியவைகளிலிருந்து வெளியே வந்து, ''மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” என்றார். (வெளி;1:18). அவர்கள், “அவர் ஒரு ஆவி” என்றனர். அவர், எனக்கு ஒரு மீன் ''சான்ட்விச்சைத் தாருங்கள்“ என்றார். அவர் அப்பமும், மீனும் புசித்தார். அவர் மரித்து, தேசத்துக்குச் சென்று, மரித்த பின்பும் ஒரு மனிதன் உயிர் வாழக்கூடும் என்னும் அத்தாட்சியுடன் திரும்ப வந்தார். அப்படியிருக்க, மரணத்துக்கு நம்முடன் என்ன சம்பந்தம்? ஆமென்! அழுத்தத்தை வெளியேற்றுங்கள். 51அது மாத்திரமல்ல, அவர் நமக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். அது என்ன? ''அவர், நமக்கு நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரத்தைக் கொடுத்திருக்கிறார். அவர், இதை ஒவ்வொரு விசுவாசிக்கும் நிரூபிப்பதற்கென; நீங்கள் இங்கு அவிசுவாசத்தில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையை விசுவாசிப்பதில்லை. நீங்கள் உலகத்தின் காரியங்களில் பாவத்தில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, மரிக்கக்கூடாத ஒரு ஜீவன்“ என்றார். இப்பொழுது கவனியுங்கள், அவருடைய ஆவியை நாம் பெறும்போது, ஒரு காலத்தில் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நமக்கு அவர் புது பிறப்பை, புது ஜீவனை அருளுகிறார். அவர் என்ன செய்கிறார்? அவர்... நாம் மரித்து இயேசுவுடன் கூட அடக்கம் பண்ணப்படுகிறோம். நாம் ஆவியில் எழுந்து உலக காரியங்களை விட்டு பரலோகக் காரியங்களுக்குச் செல்கிறோம். இன்றிரவு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம். 52இங்குள்ள எத்தனை கிறிஸ்தவர்கள் உலகத்தில் அன்பு கூருகிறீர்கள்? நீங்கள் உலகத்தில் அன்பு கூர்ந்தால் கிறிஸ்தவர் அல்ல. நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவினதாக நடிப்பவர்களேயன்றி, (professor) அதை சுதந்தரித்துக் கொண்டவர்கள் (possessor) அல்ல. ஏனெனில் ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை ஒரு முறை ருசி பார்த்தால், அவன் உலக காரியங்களுக்கு மரித்துவிடுகிறான். அதற்கு மறுபடியும் திரும்புவதற்கு அவனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வாஞ்சையே இராது. அது என்ன செய்கிறது? பவுல், “நான் முன்பு வாழ்ந்த ஜீவியத்தை இனி ஒருபோதும் வாழமாட்டேன். ஆயினும் நான் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்றான் (கலா;2:20). ஏன்? அவர் அவனை உலகத்தின் பாவமாகிய இந்த தாழ்ந்த மட்டத்திலிருந்து உயர்த்தி, நாம் திரும்பிப் பார்த்து நாம் எங்கிருந்து வந்தோம் (மகிமை!) என்றும் நாம் முன்பு எந்த நிலையில் ஜீவித்தோம் என்றும் காணத்தக்கதான நிலைக்கு உயர்த்தினார். இப்பொழுது நாம் வேறு விதமாக வாழ்கிறோம். அது என்ன? நாம் மரித்து, நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்து, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டு, உலக காரியங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதற்கு அது உறுதிப்பாடாய் விளங்குகிறது. அப்பொழுது நாம், நமக்கு நிரூபிக்க அவர் எந்த அத்தாட்சியுடன் திரும்பி வந்தாரோ, அதே அத்தாட்சியைப் பெற்றவர்களாய் உயிரோடிருப்போம். 53அது மகிமையான தேசம், இது முன்தொகை மாத்திரமே. இது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரம். இது ஒப்பந்தத்தை (மகிமை!) தேவனுடைய ஒப்பந்தத்தை நிலைக்கச் செய்ய அளிக்கப்படும் முதல் தொகை. ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.“ (யோவான்;5:24). அழுத்தத்தை வெளியேற்று, சகோதரனே. ஆம், ஐயா! ஆமென்! உங்களுக்கு விளங்குகிறதா? கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாகத் திகழந்த அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியாவைப் பாருங்கள். இரட்டிப்பான ஆவியைப் பெற்ற எலிசா தீர்க்கதரிசி சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறான். அவன் ஒரு நாள் யோர்தானை நோக்கி நடந்தான். அது இந்நாளுக்கு உதாரணமாயுள்ளது, அவர்கள் இப்பொழுது கொண்டுள்ள இந்த அரசாங்கம் போன்றவைகளுக்கு. ஆகாப், யேசபேல் போன்றவர்கள். யேசபேலைக் குறித்த என் பிரசங்கம் உங்களுக்கு நினைவிருக்கும். கவனியுங்கள், ஒரு காரணத்துக்காக எலிசா, எலியாவைப் பின்தொடர்ந்த போது.... ஆமென்! அவன் அவனை எங்கு கொண்டு சென்றான்?யோர்தானுக்கு. கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு, தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு, அதன் பிறகு யோர்தானுக்கு. அந்த வழியில் தான் அவர் உங்களைக் கொண்டு செல்கிறார். நீதிமானாக்கப்படுதலின் வழியாக பரிசுத்தமாக்கப்படுதலுக்கு, அதன் பிறகு மரித்து ஜீவனைப் பெறுதல் (ஆமென்!). ஏதோ ஒரு கோட்பாட்டைக் கொண்ட ஒரு ஸ்தாபனத்துக்கு அல்ல. ஆனால், நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கென உங்கள் ஆவி மரிக்கக் கூடிய இடத்துக்கு. 54எலிசா... எலியா தண்ணீரை அடித்து யோர்தானின் வழியாக நடந்து சென்றான். எலிசா அவனைப் பின் தொடர்ந்தான். எலிசா இப்புறமுள்ள தேசத்துக்கு இரட்டிப்பான பங்குடன் திரும்பி வந்தான். இன்றைக்கு நாம் இயேசுவை அவருடைய மரணம், அடக்கம், ஞானஸ்நானம் - இல்லை, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் ஞானஸ்நானம் மூலம் பின் தொடருகிறோம். அவரை நாம் விசுவாசிக்கிறோம். நாம் உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, நாம் ஒன்றுமில்லை என்பதை அறிக்கை செய்து, அவருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, ஞானஸ்நானத்தின் மூலம் அவரோடு கூட அடக்கம் பண்ணப்பட்டு, அவரோடு கூட உயிர்த்தெழுதலில் எழுந்திருக்கிறோம். நமது ஆவி உலகத்தின் காரியங்களுக்கு மேலாக ஜீவிக்கிறது. அப்பொழுது நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். நாம் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டோம். நாம் யோர்தானின் மரணக் கோட்டிலிருந்து திரும்ப வரும்போது, மற்ற பங்கை பெறுவோம். இப்பொழுது நமக்குள்ள சரீரங்கள். நாம் பெற்றுள்ள ஆவிகள், அச்சாரமாகிய பரிசுத்த ஆவியை கொண்டுள்ளது. அது மரிக்க முடியாது. ஏனெனில் அது தேவனின் பாகம்.... நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சரீரங்கள்.... “என் மாம்சத்தைப் புசித்து. என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” (யோவான்;6:54). ஆமென்!நீராவியை வெளியேற்றுங்கள். 55அணுகுண்டுகளோ அல்லது வேறெதுவோ தாக்கினால், அதனால் என்ன பாதகம்? அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் (ஒலிநாடாவில் மோசமான பாகம் - ஆசி). இது ஒன்று மாத்திரம் நாம் அறிவோம். அதாவது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. எனவே, உலகம் என்ன கூறினாலும் நமக்கென்ன கவலை? அழுத்தத்தைக் குறித்து நமக்கென்ன கவலை? அதனால் நமக்கு எந்த பாதகமும் இல்லை. ஏன்? ஏனெனில் நம்மால் நீராவியை வெளியேற்ற முடியும் (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது இயேசுவே உலகத்தின் ஒளியே எங்களைச் சுற்றிலும் இரவும், பகலும் பிரகாசியும். இப்பொழுது நாம் தலை வணங்கி, கைகளை உயர்த்துவோம். நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில்; இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள, இடத்திற்கு அது வருகிறது இயேசுவே உலகத்தின் ஒளியே எங்களைச் சுற்றிலும் இரவும், பகலும் பிரகாசியும். 56எங்கள் பரலோகப் பிதாவே, சாத்தான் போரில் தோற்றுவிட்டான். பொறுமையாயிருங்கள். நீராவியை அதி கரித்துக் கொள்ளாதீர்கள். இங்கு நின்று கொண்டு நீராவியை வெளியேற்றுதல் என்பதைக் குறித்து பிரசங்கம் செய்துவிட்ட பிறகு, இந்த பீட அழைப்பு கொடுக்கக் கூடாதபடிக்கு சாத்தான் என்னை பிரசங்கப்பீடத்திலிருந்து விரட்டி விடலாம் என்று எண்ணினான். இல்லை, கர்த்தாவே, என் இருதயத்தில் ஏதோ ஒன்று எரிந்து கொண்டு, இங்கு யாரோ ஒருவர் இருக்கிறார். யாரோ ஒருவர் அந்த கன்மலையை தேடிக் கொண்டிருக்கிறார்“ என்று கூறுகிறது. பிதாவே,வெற்றிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கடைசி நபர் பீடத்துக்கு நடந்து வந்தபோது, அணைந்து போயிருந்த விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கிவிட்டன. போரில் தோற்றுப் போனான் என்பதை சாத்தான் கண்ட போது, அவன் முயற்சியைக் கைவிட்டான். இங்கு கிருபையின் எண்ணிக்கையாக ஐந்து விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். ஐந்து: இயேசு, விசுவாசம், கிருபை (ஆங்கிலத்தில்: J-E-S-U-S, F-A-I-T-H, G-R-A-C-E ஐந்து எழுத்துக்களைக் கொண்டுள்ளன - தமிழாக்கியோன்). ஓ, தேவனே, நீர் தேவனாயிருக்கிறீர். நீர் தவறுவதேயில்லை. நீர் எப்பொழுதும் சரியாக இருக்கிறீர். 57நான் பார்க்கும் போது, இந்த பக்கத்தில் சகோதரி வில்சனின் மகள் நின்று கொண்டிருக்கிறாள். அந்த சிறுமியை எனக்கு ஞாபகமுள்ளது. அவளை நீர் அழைத்தது என் நினைவுக்கு வருகிறது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு நியூ மார்க்கெட்டில் அவளை நீர் அழைத்த அந்த இரவு என் நினைவுக்கு வருகிறது. கர்த்தாவே, எனக்கு ஞாபகமுள்ளது. அவள் பக்கத்தில், எங்களுடன் ஐக்கியங்கொள்ள நியூயார்க்கிலிருந்து இங்கு வந்துள்ள ஸ்திரீ நின்று கொண்டிருக்கிறாள். இங்கு ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் நின்று கொண்டிருக்கின்றனர். உலகமானது எல்லாவிதமான ஆசாபாசமான நடனங்களில் ஈடுபட்டுச் சென்று கொண்டிருக்கும் போது, இவர்கள் இந்த திருப்புமுனைக்கு வந்துள்ளனர். அவர்கள் கன்மலையைத் தேடி பீடத்தண்டை நடந்து வந்துள்ளனர். பீடத்தின் கடைசியில், ஒரு இளைஞன் கைகளையும் உயர்த்தி நின்று கொண்டிருக்கிறான். அவன் கன்மலையைக் கண்டுகொள்ள விரும்புகிறான். இயேசுவே, நீரே அந்த கன்மலை. நீர், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்திலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று உரைத்திருக்கிறீர் (மத்;18:20). அப்படியானால், அந்த கன்மலை இங்குள்ளது. 58பிதாவே, இது மிக வினோதமாக, மிக எளிதாகக் காணக்கூடும். நாங்கள் தவறு செய்யக் கூடாது என்பதற்காக நீர் காரியங்களை எளிதாக்கிவிடுகிறீர். இவர்கள் அழைப்பை ஏற்று, தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து இங்கு வருவதை தடை செய்ய சாத்தான் முயன்றான். அவன் தன்னாலான சகல முயற்சிகளைச் செய்த போதிலும் தோற்றுப் போனான். உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில் இவர்கள் மேல் என் கைகளை வைத்து உமது ஆசீர்வாதங்களைக் கூறப் போகின்றேன். தேவனே, உமது ஆசீர்வாதம் இவர்களைத் தொடர்வதாக. இவர்கள் ஆவியானவரின் வழி நடத்துதலைப் பின்பற்ற வேண்டுமென்று உத்தமமும், உண்மையுமாய் உள்ளபடியால், இதை நான் செய்கிறேன். என் சகோதரியின் ஆத்துமா அழிந்து போகாதபடிக்கும். நித்திய ஜீவனைப் பெற வேண்டுமெனும் அவளுடைய இருதயத்திலுள்ள வாஞ்சை நிறைவேற வேண்டுமென்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். 59என் சகோதரியின் மேல் என் கையை வைக்கிறேன். அநேக போராட்டங்கள் அவளைச் சுற்றி நெருங்கியிருந்தன என்பதை நானறிவேன். அவள் தன் அருமை மகனுக்காக ஜெபிக்கிறாள் என்று எனக்குத் தெரியும். இன்றிரவு தகப்பன், கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டே தசமபாகத்தை என் கையில் கொடுத்ததை நான் அறிவேன். இன்று காலை நாங்கள் ஜெபித்து அவர்களுடைய மகனை தேவனாகிய கர்த்தரிடத்தில்ச மர்ப்பித்த போது... இந்த தாயும் தகப்பனும் பிள்ளையை நேசிக்கின்றனர். தேவனே, நீராவியை வெளியேற்றி எல்லாம் சரியாயுள்ளது என்று அறிந்து கொள்ளக்கூடிய ஒரு இடம் அவர்களுக்குத் தேவையாயுள்ளது. பிதாவே, இந்த விஷயத்தை உம்மிடம் சமர்ப்பித்துவிட்டோம். அதை நீர் அருளுவீர்; எங்களுக்கு பயமேயில்லை. இப்பொழுதே அந்த உறுதியை அவளுக்கு அளிப்பீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். 60பிதாவே, இந்த இளைஞனும் இளம் பெண்ணும்ஒன்று சேர்ந்து வந்துள்ளனர். அவர்கள் மேல் என் கைகளை வைக்கிறேன். நீராவியைவெளியேற்ற அவர்கள் வந்துள்ள னர். இளம் தம்பதிகளாகிய இவர்கள், அழகுள்ளவர்கள்,பிசாசுக்கு இவர்களை மாத்திரம் உபயோகிக்க முடிந்தால், இவர்களை கண்ணியாகஉபயோகிப்பான். ஆனால் இவர்களோ எரிந்து கொண்டிருக்கும் விறகு கட்டைகளைப் போல்(firebrand) பிடுங்கப்பட்டு விட்டனர். கர்த்தாவே, அவர்கள் அந்த பாது காப்பானஇடத்தை கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காக வந்துள்ளனர். நீராவியை வெளியேற்றக்கூடியஇடத்தை, அழுத்தத்தை வெளியேற்றக்கூடிய இடத்தை அடைந்து, தேவ னுடைய சமுகத்தில் தங்களைஅமரிக்கையாக்கிக் கொண்டு, அவர் தேவன் என்று அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.பிதாவே, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியை இப்பொழுதே அவர்களுக்கு அளிக்குமாறுஜெபிக்கிறேன். 61கர்த்தாவே, கைகளை உயர்த்தினவாறு இங்கு நின்று கொண்டிருக்கும் இளைஞன், கடைசியாக பீடத்தண்டை வந்தவன். அவன் வருதவற்காக இருக்கையை விட்டு எழுந்த மாத்திரத்தில் அணைந்த விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நீர் விரும்பின எண்ணிக்கை இதுவே, இது உம்முடைய அழைப்பாயிருந்தது. ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.“ (யோவான்;6:37). நாங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, வார்த்தையை அங்கு வைப்பதே. அப்பொழுது பிதாவினால் ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் வருவார்கள். இவன் இப்பொழுது வந்திருக்கிறான். கர்த்தாவே, உட்கார்ந்து சற்று நேரம் இளைப்பாறுவதற்கென அந்த கன்மலையின் பிளவைக் கண்டுகொள்ள விரும்புகிறான். தேவனே, இப்பொழுதே அந்த பிளவுக்கு அவனை நீர் வழிநடத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 62எல்லா விலங்குகளும் உடைத்தெறியப்படுவதாக எல்லாருமே, இவர்கள் ஒவ்வொருவரையும் தொல்லைப்படுத்தி கொண்டிருக்கும் எதிர்ப்புகள் அனைத்தும் இவர்களிலிருந்து இப்பொழுதே விலகுவதாக அந்த சிறு காரியம், சிறு கோபம், அது எதுவானாலும், சிறு மனோபாவம், அந்த சிறு கவலை, அந்த சந்தேகம், சுற்றி நெருங்கி நிற்கிற அந்த சிறு பாவம், கர்த்தாவே, அவர்களுடைய சகோதரனும் உம்முடைய ஊழியக்காரனும் என்னும் முறையில் ஜீவனுள்ளோருக்கும், மரித்தோருக்கும் இடையே நின்று இவர்களுக்காக பரிந்து பேசுகிறேன். தேவனே, இவர்களுடைய ஆத்துமாக்களை நான் உரிமை கோருகிறேன். அவர்கள் பீட அழைப்புக்கு கீழ்படிந்த தன் அடிப்படையில் அவர்களுடைய ஜெயத்தை உரிமை கோருகிறேன். சாத்தான் அதை நிறுத்தப் பார்த்தான் என்று நாங்கள் அறிவோம். ஆயினும், உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில் இவர்களை உரிமை கோரி, அவருடைய கிருபையின் விருதுகளாக, அவர்களை இன்றிரவு கடினமான சூழ்நிலையிலிருந்து கன்மலையினிடம் கொண்டு வந்த பரிசுத்த ஆவியின் சமுகத்தின் விருதுகளாக, இயேசு கிறிஸ்துவுக்கு அளிக்கிறேன். இப்பொழுது அவர்கள் அழுத்தத்தை வெளியேற்றி, “நான் அழைக்காவிட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான். ''என்னிடத்தில் வரும் எல்லோருக்கும் நான் நித்திய ஜீவனை அளித்து, அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று இயேசு கூறியுள்ளார் என்பதை அறிந்து கொள்வார்களாக. கர்த்தாவே, அது முடிவு பெற்றுவிட்டது. இப்பொழுது இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் இவர்களை உமக்களிக்கிறேன். ஆமென். 63நீங்கள் இங்கு நின்று கொண்டிருக்கும் இந்நேரத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இருக்கைகளுக்கு திரும்பிச் செல்லும் போது, நீங்கள் வாஞ்சித்த அனைத்தும், சுற்றி நெருங்கி நிற்கிற பாவமும், தவறுகளும் இரத்தத்தின் கீழ் உள்ளது என்பதை அறிவீர்களாக. அது முடிந்துவிட்டது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சகோதரனே, அதை விசுவாசிக்கிறாயா? சகோதரியே, அதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால், அப்படியே ஆகும் என்றல்ல. அது ஏற்கனவே நடந்துவிட்டது. அது உண்மை. அது இறந்த காலம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் வாழ்க்கையிலுள்ள மிகச் சிறப்பானவைகளும், இப்பொழுது நீங்கள் பெற்றுள்ள நித்திய ஜீவனும்... அப்படியானால் நீங்கள் பாவத்தை விட்டு உயர ஏறிவிட்டீர்கள். பாவம் உங்கள் கால்களின் கீழ் உள்ளது. இங்கு நின்று கொண்டு உங்களிடம் தவறான ஒன்றைக் கூறுவதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? வாழ்க்கை பாதையின் முடிவில் நான் ஒரு வஞ்சகனாகக் கருதப்படுவேன். பாருங்கள்? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த காரணத்தால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டீர்கள். இப்பொழுது பாவம் அனைத்தையும் தள்ளிவிட்டு, எல்லா கட்டுகளையும் முறித்து போட்டு, சுயாதீனமாகச் சென்று நீராவியை வெளியேற்றுங்கள். நீங்கள் கிறிஸ்தவர். நீங்கள் பாவத்துக்கு மேலாக உயர்த்தப்பட்டு, உங்கள் நித்திய இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார். 64அவர், என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனை அளித்து, அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன் என்று கூறவில்லையா? அப்படியானால் அது முடிவு பெற்றுவிட்டது. ஆமென்! அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் மேல் கிருபையாயிருப்பாராக. அங்குள்ளவர்களே, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். அழுத்தம்அனைத்தும் போய்விட்டதை எத்தனை பேர் உணருகிறீர்கள்? என் ஆத்துமாவை இளைப்பாறும் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளேன், இனி ஒருபோதும் கொந்தளிக்கும் கடலில் படகில் செல்ல மாட்டேன், கொந்தளிக்கும் ஆழத்தில் புயல் வீசக்கூடும், ஆனால் நான் இயேசுவில் இனி எப்பொழுதும் பாதுகாப்பாயிருப்பேன். 65ஒரு நாள் கடற்கரை ஓரத்தில் சார்லஸ் வெஸ்லிதனிமையில் இருந்த போது... அவருக்கு ஒரு சிறு வீடு இருந்தது; அவர் படித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பாடலை எழுத தேவன் அவரை ஏவிக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த பாடலைத் தொடங்க எதுவும் கிடைக்கவில்லை. அவர் ஏதாவதொன்றைத் தொடங்கும் போது ஊக்கம் அவரை விட்டுச் சென்றுவிடும். எனவே அவர் கடற்கரையில் நடந்து சென்று, அலைகள் மோதுவதைக் கண்டால் ஊக்கம் மேலிடும் என்று எண்ணினார். திடீரென்று புயல் உண்டானது. எதுவுமே எதேச்சையாக நடப்பதில்லை. எல்லாமே தேவனுடைய தீர்மானத்தின்படி நடக்கிறது. என்ன நடந்தாலும், சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும். 66அவர் தன் சிறு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது காற்று பலமாக அடித்தது. “ஓ, நான் வீடு சேருவதற்கு முன்பு இந்த பலத்த காற்று என்னைக் கடற்கரையிலிருந்து தூக்கி சென்றுவிடுமே என்று நினைத்து. கோட்டை இழுத்து மூடிக் கொண்டு ஓடத் தொடங்கினார். அப்பொழுது ஏதோ ஒன்று பறந்து அவருடைய மார்பை அடைந்தது. அவர் பார்த்த போது, அது அடைக்கலம் தேடி வந்த ஒரு அடைக்கலான் குருவி. புயல் அடித்து ஓய்ந்து வெயில் வரும் வரைக்கும் அவர் அதை தன் மார்பில் அணைத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் அதை தன் விரலின் மேல் நிறுத்தினார். அது பறந்து சென்றது. அப்பொழுது அவர் ஊக்கம் மேலிட்டு, எனக்காக பிளவுண்ட காலங்கள் தோறும், உள்ள கன்மலையே, என்னை நான் உம்மில் மறைத்துக் கொள்வேனாக, என்னும் பாடலை எழுதினார். ஓ, அது எனக்குப் பிடிக்கும். காலங்கள் தோறும் உள்ள கன்மலை, களைப்புற்ற தேசத்தில் உள்ள அந்த கன்மலை, புயலின் போது புகலிடம். களைப்புற்ற தேசத்தில் உள்ள கன்மலையே, என்னை மறைத்துக் கொள்வீராக, ஓ, எனக்காகப் பிளவுண்ட காலங்கள் தோறும் உள்ள கன்மலையே. 67பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அந்த கவிஞர்கள் பாடல்களை எழுதி வைத்து, அவைகளை இப்பொழுது நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள், இந்த பாடல்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலினாலா எழுதப்பட்டன? என்று கேட்கலாம். இயேசு இவ்வுலகில் இருந்த போது, “சங்கீதங்களில் எழுதியுள்ளனவே, தாவீது இன்னின்னதை கூறினான் என்று?” என்றார். நிச்சயம் அவை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டவையே. பிரசங்கம் செய்வது அல்லது வேறெதாவதைப் போன்று இவையும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டவை. எனக்கு ஒரு புகலிடம் உள்ளதற்காக எனக்குமிக்க மகிழ்ச்சி. வேறெந்த புகலிடமும் எனக்குக் கிடையாது. என் நம்பிக்கை, இயேசுவின் இரத்தத்திலும், நீதியிலுமேயன்றி வேறெதன் மேலும் கட்டப்படவில்லை, சுற்றிலும் என் ஆத்துமா தளர்ந்து போகும்போது; அவரே என் நம்பிக்கையும் நான் தங்குமிடமாகவும் உள்ளார். கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன்; மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே. (அது எதுவானாலும்). தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது உங்கள் போகதர் சகோ. ரட்டல். சாத்தான் விளக்குகளை அணைத்ததற்காக வருந்துகிறேன். ஆனால், எப்படியும் தேவன் ஜெயங் கொண்டார்.